• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-11 18:12:29    
துருவ அறிவியல் ஆய்வு

cri

வட துருவத்தில் அறிவியல் ஆய்வு ஆய்வு நிலையத்தை நிறுவுவது அப்பிரதேசத்தின் மீதான அறிவியல் ஆய்வு வரலாற்றில் முக்கிய முன்னேற்றமாகும். துருவ ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிவியல் அறிஞர்கள் வட துருவப் பிரதேசத்தில் நீண்டகாலமாக அறிவியல் ஆய்வு ஆய்வு மேற்கொள்ள கூடிய தரை நிலையத்தை அமைத்துள்ளனர். ஓராண்டு காலத்துக்குள் சீனாவின் பத்துக்கும் மேலான தலைசிறந்த ஆய்வாளர்கள் அங்கே சுமார் பத்து அறிவியல் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நிலையத்தை அடிப்படை தளமாக கொண்டு அவர்கள் ஹெலிகாப்டர், பனிக் கட்டியின் மேல் ஓடும் வாகனங்கள் ஆகியவற்றை கொண்டு அறிவியல் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதேவேளையில் செயற்கை கோள் மூலம் தொலை தூர கட்டுப்பாட்டு தொழில் நுட்பம் உள்ளிட்ட உயர் அறிவியல் தொழில் நுட்பத்தை போதியளவில் பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளனர்.

நிலையம் நிறுவப்பட்டு குறுகியகாலத்திதில் இப்போது வட துருவத்தில் உள்ள சீன அறிவியல் ஆய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் தற்போது ஆராய்ச்சி கட்டத்தில் இருக்கின்றன. இருந்தாலும் சில ஆய்வுகள் வெற்றிகரமானவை. அறிவியல் ஆய்வு நிலையத்தின் முதன்மை அறிவியலாளர் டாக்டர் யான் குவெய் கன் எமது செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது

மஞ்சள் ஆறு எனும் ஆய்வு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பூ கோள உயிரின வாழ்க்கை சூழல் வளர்ச்சி பற்றிய பரிஆய்வு மூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயனை அளித்துள்ளது. நிலையம் இருக்கின்ற இடம் முன்பு நிலக்கரி நிறுவனம் அமைந்த இடமாகும். கடந்த 60ம் ஆண்டுகள் வரை அங்கு நிலகரி சுரங்க அகழ்வு நடந்தது. சீன அறிவியலாளர்கள் உயிரினங்கள், பூ கோளம், வேதியியல் ஆகிய வழிமுறைகளினால் சுரங்க அகழ்வு பூ கோளத்தின் உரியின வாழ்க்கைக்கு ஏற்பட்ட தாக்கம் பற்றி ஆராய்ந்தனர். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக NL-ALESUND பிரதேசத்தில் நிலக்கரி அகழ்வு மனித குல நடவடிக்கை ஆகியவற்றினால் கடல் பறவைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது என்று சோதனை முடிவு எடுத்துக் காட்டுகின்றது என்றார் அவர்.

தவிர, சீன அறிவியல் அறிஞர்கள் நிலையத்தில் கதிர் வீச்சு ஆய்வு கருவியின் மூலம் வட துருவத்தின் வான்பகுதியில் இயற்பியல் சூழலை அளந்துள்ளனர். துருவ மின்னொளி கதிர்வீச்சு பற்றி 1000 மணி நேரம் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வட துருவப் பிரதேசத்தின் வான் இயற்பியல் துறையிலான ஆய்வளவை விரிவாக்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் வட துருவத்தில் மேற்கொள்ளப்படும் குறிக்கோள்களில் இரண்டு வகை உள்ளன. ஒன்று வட துருவப் பிரதேசத்தினால் புவிநிலை மாற்றத்தின் மீது ஏற்படும் எதிரொலிப்பு. ஆர்க்கடிக் கடல் பிரதேசத்தில் கடல் மற்றும் காலனிலை கண்காணிப்பு முறையை நிறுவுவது. இன்னொன்று வட துருவத்தின் மாற்றத்தால் சீனாவுக்கு ஏற்படக் கூடிய வானிநிலை மாற்றத்தைக் கண்டறிவது என்று நிபுணர்கள் கூறினர்.

1  2  3  4