• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-20 10:16:36    
பேருந்தில் சுற்றுலா

cri

கடந்த இரண்டு ஆண்டுகளாக, வழிகாட்டி செல்வி கௌ, பெய்ச்சிங்-ஷாங்காய் பேருந்துப் பாதையில் பணி புரிந்துவருகின்றார். இது பற்றி அவர் கூறியதாவது,
பொதுவாகப், பண்டைக் காலக் கட்டடங்கள், பழங்காலச் சிறப்பு வாய்ந்த பண்பாடு ஆகியவற்றில் பயணிகள் அக்கறை காட்டுகின்றனர். பெய்ச்சிங்கில், பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகம், பெருஞ்சுவர் ஆகியவற்றையும், சான்துங் மாநிலத்து சியுஹு நகரில் கன்பூசியஸின் கோயில் மற்றும் கல்லறையையும் பார்வையிட அவர்கள் விரும்புகின்றனர். தவிர, சியுசோ நகரில் பண்டைக் காலக் கல்லறைகளைக் காணலாம். இறுதியில் முக்கிய சுற்றுலா இடமான சர்வதேச மாநகர் ஷாங்காயில் பொருட்களை வாங்குவது தவிர, வேறுபட்ட சுவையான உணவுகளையும் சுவைத்துப்பார்க்கலாம். பயணிகள் இதில் அக்கறை கொண்டுள்ளனர் என்றார் அவர்.

பொதுவாக கூறின், வெளிநாட்டுப் பயணிகள் பெய்ச்சிங், ஷாங்காய் ஆகிய இரு மாநகரங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். பேருந்தில் செல்வதற்குப் பதிலாக, விமானம் மூலம் இவ்விரு நகரங்களுக்குச் சென்றால், அவர்களில் பெரும்பாலோர் வழி சுற்றி சியுஹு, சியுசோ ஆகிய நகரங்களுக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால் உண்மையிலே இவ்விரு இடங்களும் பார்க்கத் தக்க இடம். சியுஹு நகரம், சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், பிரபல சிந்தனைவாதி கன்பூசியஸின் பிறந்த ஊராகும். அவருடன் தொடர்புடைய பண்டைக் காலச்
சின்னங்கள் பல உள்ளன. இவற்றில், கன்பூசியஸின் பழைய இல்லம்- அது இப்போது கன்பூசியஸின் கோயில் மாற்றப்பட்டுள்ளது. கன்பூசியஸின் குடும்ப மாளிகை, கல்லறை ஆகியவை குறிப்பிடத் தக்கவை. சியுசோ நகரில் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டைக்காலக் கல்லறைகள் பல உள்ளன.
1  2  3