
சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 5 குடும்பக் கல்லறைகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் பயணிகளைக் கூட்டிக் கொண்டு இந்தப் பண்டைக் காலக் கோயில்களையும் கல்லறைகளையும் காட்டிய போது, பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர் என்றார் வழிகாட்டி கௌவிவி. அடுத்து, சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகிறோம். பெய்ச்சிங் மாரத்தன் ஓட்டப் போட்டி நேயர்களாகிய நீங்கள், பெய்ச்சிங் சர்வதேச மாரத்தன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள விரும்பினால், சீன சர்வதேச சுற்றுலாப் பணியகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பம் செய்யலாம். தொலைபேசி எண் 00861065221638 அல்லது 00861085228503. உங்களுடைய கோரிக்கைக்கிணங்க, ஹோட்டல் அறை பதிவு செய்யப்படும். மாரத்தன் ஓட்டப்போட்டிக்குப் பின்னர் பெய்ச்சிங்கில் சுற்றுலா செல்ல வசதி வழங்கப்படும். தவிர, சீனாவின் இதர இடங்களுக்கும் நீங்கள் சுற்றுலா செல்லலாம். 1 2 3
|