
உயர் வேக நெடுஞ்சாலையில் பேருந்து மூலம் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் வழியில் உள்ள இடங்களைக் காண மிகுந்த ஆர்வம் காட்டுவதை அறிந்தோம். வழி நெடுகிலும் எழில் மிக்க இயற்கை காட்சிகளைக் கண்டுகளித்த அவர்கள் அடிக்கடி வியப்படைந்தனர். பேருந்திலிருந்து இறங்கிக் காட்சிகளைக் கண்டுகளிக்கவும் நிழற்படங்களை எடுக்கவும் பயணிகள் விரும்பிய போதெல்லாம், பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரைத் தாம் வேண்டிக்கொண்டதாக வழிகாட்டி கௌ கூறினார். தற்போது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பயணிகள் சிலர் பேருந்தில் பயணம் செய்வதைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, அமெரிக்கர் BILL MILEWSKI, இத்தகைய பேருந்து பயணத்தில் மூன்று முறையாகக் கலந்துகொண்டார். அவர் கூறியதாவது, வெளிநாட்டவர்களாகிய எங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு முறையிலும் சீனாவில் குறைவான நேரமே பயணம் மேற்கொள்கிறோம்.

விமானத்தில் செல்வதற்கு நேரம் செலவழிக்க நான் விரும்பவில்லை. பெய்ச்சிங்கிலிருந்து ஷாங்காய் செல்லும் வழியில் தைய்சான் மலை, கன்பூசியஸின் கோயில் ஆகியவற்றைப் பார்வையிடலாம். ஏன் இப்படிச் செய்யவில்லை. அத்துடன், பேருந்தில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, சீனாவின் பண்டை கால நாகரிகத்தைக் கண்டறியும் அதே வேளையில், மேலும் அதிகமான புதமைகளையும் கண்டுகளிக்கலாம் என்றார். சீன சர்வதேச சுற்றுலா துறை அதிகாரி சாங்சுவொ எமது செய்தியாளரிடம் பேசுகையில், பேருந்தில் சுற்றுலா செல்லும் முறையைத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலோர், சீனாவின் பண்டை கால நாகரிகம் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். பெய்ச்சிங்-ஷாங்காய் பேருந்தில் சுற்றுலா சென்ற பிறகு, பெய்ச்சிங்-சிஆன் பேருந்தில் சுற்றுலா செல்ல அவர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
1 2 3
|