
நேயர்களாகிய நீங்கள், பேருந்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள விரும்பினால், தற்போது பொருத்தமான காலம் தான். நல்ல வானிலை. இந்த வாய்ப்பினைத் தவறாமல் பயன்படுத்துங்கள். அடுத்து சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகிறோம்.பேருந்தில் சுற்றுலா பற்றிய விவரம் தற்போது சீன சர்வதேச சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்த பேருந்தில் சுற்றுலா என்னும் பயண வழி குறித்து, பேருந்து புறப்படும் குறிப்பான நேரம் நிச்சயிக்கப்படவில்லை. விண்ணப்பம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறிப்பட்ட அளவை எட்டிய பின்னர் தான் பேருந்து சுற்றுலா பயணக் குழு புறப்படும். அடுத்த ஆண்டு முதல், பேருந்து சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்கும் பயணிகள், குழுவாக உருவான பின்னர் புறப்படும் நேரம் நிர்ணயிக்கப்படும். ஆண்டுக்கு 20 பேருந்து சுற்றுலாக் குழுக்களை ஏற்பாடு செய்ய சீன சர்வதேச சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இத்தகைய பயணக் குழுவில் கலந்துகொள்வோர் தலா 6000 ரென்மின்பி யுவான் செலவழித்தால் போதும். 1 2 3
|