• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-13 20:18:16    
பேருந்து மூலம் சுற்றுலா

cri

பெய்ச்சிங்-சிஆன் பேருந்து சுற்றுலாப் பாதையில் பண்டைக் காலக் கல்லறைகள் அதிகமாக உள்ளன. சிஆனுக்குச் சென்றால், பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறையையும் அதிலுள்ள சுடுமண் படைவீரர்களின் உருவச் சிலைகளையும் நிச்சயம் பார்க்க வேண்டும். சான்மன்சியாவில் நிலத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ள தொல் பொருட்கள் பலவற்றைக் காணலாம். இவற்றைக் கண்ட பயணிகள் மிகவும் மனநிறைவு அடைந்துள்ளனர். தவிர, யின்சியு என்னும் இடத்தில், எலும்புகளில் அல்லது ஆமைகளின் ஓட்டில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைப் பார்க்கலாம். இத்தகைய எழுத்துக்கள், இந்த இடத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டன என்றார் அவர்.
உலகில் எட்டாவது அற்புதமென போற்றப்படும் சுடுமண் படைவீரர்களின் உருவச் சிலைகள், சீன வரலாற்றில் முதலாவது பேரரசர் சிங்ஸ்ஹுவானுடன் இணைந்து புதைக்கப்பட்டன. பின்னர், பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறைக்கு அருகில் உண்மையான மனிதர் அளவுக்கு உடலமைப்பு உள்ள சுடுமண் மனிதப் பொம்மைகளும் சுடுமண் பொம்மைகளும் உண்மையான குதிரை அளவுடைய சுடுமண் குதிரைகளும் ஆக சுமார் 7000 தொல் பொருட்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

அவை, நிலத்திற்குக் கீழ் பேரரசர் சிங்ஸ்ஹுவானைப் பாதுகாக்கும் ராணுவக் குழுவாக இருந்தன. ஹொனான் மாநிலத்தின் அன்யாங்கில் அமைந்துள்ள யின்சியு என்னும் இடத்தில், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம்
ஆமைகளின் ஓடுகளும் விலங்குகளின் எலும்புகளும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. தற்போது சீனர் பயன்படுத்தும் ஹென் இன மொழி எழுத்துக்கள், இந்த எழுத்துக்களிலிருந்து உருமாறி வந்தவை என்றார் சாங்சுவொ.
MILEWSKI போன்ற வெளிநாட்டுப் பயணிகள் சீனாவில் தொல் பொருள், பண்டைக்காலச் சின்னங்கள் ஆகியவற்றின் மீது அக்கறை கொண்டுள்ளனர். இது மட்டுமல்ல, உயிர்த்துடிப்புடன் கூடிய நவீன சீனாவை அறிய அவர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். சீனாவை மேலும் நன்கு அறிந்துகொள்வதில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு நல்ல வாய்ப்பினை வழங்கும் பொருட்டு, சீன சர்வதேச சுற்றுலாத் துறை மேலும் பல பேருந்துச் சுற்றுலா பாதைகளைத் திறந்துவைக்கத் திட்டமிட்டுள்ளது என்று சாங்சுவொ சொன்னார்.
1  2  3