• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-10 16:24:55    
ஹு நான் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி

cri

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதாரத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சியோடு, சமமான வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஹு நான் மாநிலத்துக்கு வடக்கில், சீனாவில் மிக நீளமான யாங்ச்சி ஆறும், தெற்கில், கடற்கரை பிரதேசங்களில் மிக வளர்ச்சி அடைந்த குவாங் துங் மாநிலமும் உள்ளன. சீனாவின் கிழக்கு கடற்கரை பிரதேசங்களை மத்திய மற்றும் மேற்கு பகுதிகளுடன் இணைக்கும் இந்த மாநிலத்தில், 5 ரயில் பாதைகள், 70க்கு அதிகமான நெடுஞ்சாலைகள், பத்து ஆயிரம் கிலோமீட்டர் நீளமான உள் நாட்டு நீர்வழி போக்குவரத்து வழித் தடங்கள், பல விமான வழித் தடங்கள் ஆகியவை உள்ளன. இந்த வசதிகள், ஹு நான் பொருளாதார வளர்ச்சிக்கு மிக சாதகமான நிலைமையை உருவாக்கியுள்ளன.

பல ஆண்டுகளாக, வேளாண் தொழில் மாநிலம் என ஹு நான் போற்றப்பட்டது. அதன் உள் நாட்டு மொத்த உற்பத்தி, சீனாவின் மாநிலங்களில் பத்துக்கு மேற்பட்ட இடத்தில் உள்ளது. தொழில் துறையின் மொத்த சொத்து, உற்பத்திப் பொருட்களின் விற்பனை மற்றும் மொத்த லாபம், சுமார் 20வது இடத்தில் இருக்கின்றன. பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, தானிய விளைச்சலை உறுதிப்படுத்தும் அதே வேளையில், தொழில் மயமாக்கத்தையும் நகரமயமாக்கத்தையும் மேம்படுத்தி, பொருளாதாரத்தின் வளர்ச்சி முறையை மாற்றும் நெடுநோக்கு திட்டத்தை ஹு நான் மாநிலம் முன்வைத்தது.

ஹு நான் மாநிலத் தலைவர் சோ போ ஹுவா செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் கூறியதாவது—

"பெரும் மக்கள் தொகை கொண்ட, வேளாண் மாநிலம் என்ற முறையில், பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலம் என்ற திசையை நோக்கி முன்னேற, வேளாண் தொழில்களை வளர்த்து, நகரமயமாக்கத்தையும் விரைவுபடுத்த வேண்டும்" என்றார் அவர்.

1  2  3