• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-10 16:24:55    
ஹு நான் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி

cri

CHANG DIAN நிறுவனம், சீனாவில் மோட்டார் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் புகழ் பெற்ற நிறுவனமாகும். 2010ஆம் ஆண்டு வரை, BOSCH நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை வழங்கும் அலுவல் மட்டுமே, எங்கள் நிறுவனத்துக்கு 120 கோடி யுவான் மதிப்புள்ள ஆண்டு விற்பனை வருமானத்தை தரும் என்று இந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் சாங் கோ சைய் செய்தியாளரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது—

"எங்கள் உற்பத்திப் பொருட்களின் தொழில் நுட்பங்கள் BOSCH நிறுவனத்திலிருந்து வருகின்றன. கூட்டாளிக்கு எதிராக எங்கள் போட்டியாளர் ஆனால், எங்கள் நிறுவனம் போட்டியில் தோற்கடிக்கப்படுவது உறுதி. தவிர, BOSCH நிறுவனம் சீனாவில் வளர்வதோடு, சீனாவை அதன் ஒரு வினியோக வணிகமாக கருதுவதால், எதிர்காலத்தில் CHANG DIAN நிறுவனத்துக்கு வளர்ச்சி கிடைக்கும் வாய்ப்பு அதிகம். எங்கள் வளர்ச்சி குறிக்கோள் விரைவில் நிறைவேறக் கூடும்" என்றார் அவர்.

CHANG DIAN நிறுவனம் BOSCH நிறுவனத்துடன் ஒத்துழைக்கும் போக்கில் ஹு நான் மாநிலத்தின் தொடர்பான வாரியம் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. இம்மாநிலத்தின் தலைவர் சோ போ ஹுவா எடுத்துக் கூறியதாவது—

"ஒரு பகுதியில் முதலீடு செய்யும் எந்த முதலீட்டாளருக்கும், லாபம் கிடைக்குமா என்பது தான், மிக அடிப்படையான வரையறை. இதைப் பொறுத்தே நீண்டகால முதலீடுகள் வருவது அமைந்திருக்கும். எனவே, ஹு நான் மாநிலத்தில் மேம்பாடுடைய அரசுத் துறை தொழில் நிறுவனங்களையும் புகழ்பெற்ற வணிக சின்னங்களையும் கொண்டு, வெளிநாட்டு வணிகர்களையும் முதலீட்டையும் ஈர்க்கிறோம். இந்த நிறுவனங்களில் சொத்துரிமை சீர்திருத்தத்தையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்கிறோம்" என்றார் அவர்.

2010ஆம் ஆண்டுக்குள், ஹு நான் மாநிலத்தின் ஒட்டுமொத்த தொழில் நுட்ப புத்தாற்றல் பெரிதும் வலுப்படும். மென்ரக தொழில், துணி தொழில், வேதியியல் தொழில் உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களும் தொழில் நுட்பத்தின் தரமேம்பாடு காணும். அப்போது, ஹு நான் மாநிலம், வேளாண் மற்றும் தொழில் துறையில் வளர்ச்சி அடைந்துள்ள வலுவான மாநிலமாக வளரும்.


1  2  3