பின்தங்கிய பாரம்பரிய தொழில் துறையின் கட்டமைப்பை எவ்வாறு மாற்றுவது என்பது, தொழில் வளர்ச்சியில் ஹு நான் மாநிலம் சந்தித்த முதன்மை பிரச்சினையாகும். ஹு நானிலுள்ள ஆயிரக்கணக்கான அரசு தொழில் நிறுவனங்களில், போட்டியிடும் திறன் மிக்க பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதி கூட இல்லை. இத்தகைய கட்டமைப்பு நவீன தொழில் போட்டி சூழலில் பாதகமாக உள்ளது. இதைச் சமாளிக்க, தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைவதன் மூலம், மேம்பாடுகளை பரஸ்பரம் பயன்படுத்தி கூட்டாக வளர்ச்சி காணும் யோசனையை ஹு நான் மாநிலம் முன்வைத்தது.
 
சீன இயந்திர தயாரிப்பு தொழிலில், பு யுவான் குழுமம் பழைய தொழில் நிறுவனமாகும். அதன் தயாரிப்பு ஆற்றல் மிக்கது. ஆனால், தொழில் நுட்பம் பின்தங்கியது. அதற்கு எதிராக, சாங் சா கட்டுமான இயந்திர ஆயவகம் தொடங்கிய சொங் லியான் குழுமத்தின் அறிவியல் ஆராய்ச்சி ஆற்றல் மிக்கது. ஆனால் அதன் உற்பத்தி திறன், வரம்புக்கு உட்பட்டது. இதனால் அதன் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டது.

சொங் லியான் குழுமும், பு யுவான் குழுமமும் தத்தமது மேம்பாட்டையும் தேவையையும் பயன்படுத்தி, ஒருங்கிணைவதற்கு சீரான அடிப்படையை உருவாக்கியுள்ளன. சாங் சா நகரின் துணை மேயர் லியு சியௌ மிங் கூறியதாவது—
"மூலவளத்தில் இவ்விரு நிறுவனங்களுக்கு தத்தமது மேம்பாடு உண்டு. பற்றாக்குறையும் உண்டு. இவ்விரு நிறுவனங்களும் ஒன்றிணைந்தால், மேம்பட்ட மூலவளத்தை பரஸ்பரம் தந்து, நிறைவு செய்ய முடியும். ஒன்றுக்கு ஒன்று பயனளிக்க முடியும்" என்றார் அவர்.
மறு சீரமைப்புக்குப் பின், பு யுவான் குழுமம், சொங் லியான் குழுமத்தின் தொழில் நுட்பத்தையும் மூலதனத்தையும் பெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டு அதன் லாபம், கடந்த 15 ஆண்டுகளின் மொத்த லாபத்தைத் தாண்டியுள்ளது. இதனிடையே சொங் லியான் குழுமம் பெரும் தயாரிப்பு ஆற்றலை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதன் விற்பனை வருமானம் 450 கோடி யுவானை தாண்டியுள்ளது. அவை கூட்டாக வெற்றி கண்டுள்ளன.
விரைவான வளர்ச்சியை காண்பதற்காக, உள்ளூர் நிறுவனங்கள் ஒன்றிணைவதை விரைவுபடுத்துவதை தவிர, தரமிக்க சொத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம், வெளிநாட்டு மூதலீட்டாளர்களை ஈர்த்து, உள்ளூர் தொழில் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதை ஹு நான் மாநிலம் விரைவுபடுத்துகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் நாள், ஹு நான் CHANG DIAN பங்கு முதலீட்டு நிறுவனம், உலகில் மிகப் பெரிய மோட்டார் வாகன பாகங்கள் வினியோக வணிகமான ஜெர்மன் BOSCH நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை உருவாக்கி, நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவை நிறுவியது.
1 2 3
|