• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-13 16:17:39    
துவங்கியுள்ள தேசிய விளையாட்டு போட்டி

cri

சீனாவின் பத்தாவது தேசிய விளையாட்டு போட்டிகள் கடந்த 12ம் நாளிரவு சியாங்சு மாநிலத்தின் தலைநகரான நான்கிங்கில் துவங்கியது. சீன அரசு தலைவர் ஹுச்சின்தாவ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகே முதலிய தலைவர்களும் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டி சீனாவின் மிக பெரிய முழுமையான விளையாட்டு விழாவாகும். அது மட்டுமல்ல சீனாவின் ஒட்டுமொத்த நாட்டு ஆற்றலை உயர்த்தவும் மக்கள் விளையாட்டு போட்டியின் மூலம் உடல்நலனைப் பேணிக்காப்பதற்கும் காணப்படும் ஒரு வாய்ப்பாக இது கருதப்படுகின்றது. நேற்றிரவு 60 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய பிரமாண்டமான நான்கிங் ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற மகத்தான துவக்க விழாவில் சீன அரசு விளையாட்டு ஆணையத்தின் தலைமை தலைவர் லியூ பங் உரை நிகழ்த்தினார்.
ஓரளவு வசதி படைத்த, இணக்கமான சோஷலிச சமூகத்தை உருவாக்கும் தருணத்தில் நடப்பு விளையாட்டு போட்டி நடைபெறுகின்றது. வெற்றி பெற வாழ்த்துகின்றேன் என்றார்.
தொழில் முறை விளையாட்டுக்களிலும் மக்கள் அனைவரும் ஆரோகேகியமாக உடல் பயிற்சி செய்வதிலும் சீன அரசு முக்கியத்துவம் செலுத்துகின்றது. நேற்றைய துவக்க விழாவில் சீன அரசு தலைவர் ஹுச்சினாதாவ் சீன மக்கள் குடியரசின் 10வது தேசிய விளையாட்டு விழா துவங்குகின்றது என்று அறிவித்ததும் விளையாட்டுத் திடலில் மக்களின் கரவொலி எதிரொலித்தது.
1  2  3