|
துவங்கியுள்ள தேசிய விளையாட்டு போட்டி
cri
 2004ம் ஆண்டில் நடைபெற்ற ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் சீன வீரர்கள் மொத்தம் 32 தங்க பதக்கங்களை வென்று பதக்க வரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்று நாட்டுக்கு கௌரவத்தை தேடித் தந்தனர். அப்போதே ஒலிம்பிக் விளையாட்டு "பெய்சிங் தருணத்தில்"நுழைந்துவிட்டது. ஒலிம்பிக் விளையாட்டுக்கு உற்சாகத்துடன் ஆதரவளித்து பங்கெடுக்கும் சீனா உலக விளையாட்டு அரங்கில் மேலும் முக்கிய இடம் வகிக்கின்றது. பத்தாவது தேசிய விளையாட்டு போட்டி 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாடு போட்டி துவங்குவதற்கு முன் நடைபெறும் இறுதி தேசிய விளையாட்டு போட்டியாகும். ஆகவே இதை பெய்சிங் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு கட்டியங் கூறும் வகையில் நடத்தப்படும் பயிற்சி விளையாட்டுப் போட்டியாகக் கருதலாம். விளையாட்டு போட்டி நடைபெறும் நாட்களில் பூப் பந்து போட்டி, மேசைப் பந்து போட்டி உள்ளிட்ட உலகத் தரமான விளையாட்டு போட்டிகளை ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இதற்கிடையில் விளையாட்டு போட்டி அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பல உடல் பயிற்சிகளிலும் ஈடுபடலாம். துவக்க விழாவில் சுமார் 10 ஆயிரம் நான்கிங் நகரவாசிகள் சிறந்த கலைவிளையாட்டு நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இதன் மூலம் சீன மக்கள் ஈடுபடும் விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக வளரும் காட்சி மக்களின் பார்வையில் விரிந்தது. 1 2 3
|
|