துவங்கியுள்ள தேசிய விளையாட்டு போட்டி
cri
 12 நாட்கள் நடைபெறும் இந்த பத்தாவது தேசிய விளையாட்டு போட்டியில் 32 வகை விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இருக்கின்ற போட்டிகள் அனைத்தும் இதில் இடம் பெறுகின்றன. சீனாவின் 31 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள், அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள மாநகரங்கள், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசம், மகௌ சிறப்பு நிர்வாக பிரதேசம் ஆகியவற்றிலிருந்து வந்த 10 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கு எடுக்கின்றனர். இவ்வாறு பங்கெடுப்போரின் எண்ணிக்கையும் விளையாட்டு போட்டிகளின் எண்ணிக்கையும் முந்தைய விளையாட்டு போட்டிகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளன. இவ்வளவு பெரிய, உயரிய தரமுள்ள தேசிய விளையாட்டு போட்டி சர்வதேச விளையாட்டு நிபுணர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகே, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டுக் கமிட்டித் தலைவர் வேர்புலுக்கங் முதலிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முக்கிய அதிகாரிகள் அழைப்பை ஏற்று துவக்க விழாவில் கலந்து கொண்டனர். அத்துடன் அவர்கள் விளையாட்டு போட்டிகளின் போது நடைபெறும் பல நடவடிக்கைகளிலும் கலந்து கொள்வார்கள். 1 2 3
|
|