• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-13 16:58:30    
சிக்கனமான சமூகம்

cri
ராஜாராம்.....சிக்கனம் என்பதில் புதியதாக எதுவும் இல்லை. அப்படிதானே.

கலையரசி..... ஆமாம். இது பழைய பிரச்சினை தான். பொருள் பற்றாகுறை இருந்த காலத்தில் நாம் சிக்கனமாக வாழ்ந்தோம்.

ராஜாராம்.....இன்றைய காலத்தில் சமதுவ-பொருளாதார வளர்ச்சி விரைவாக ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை தரம் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மக்களின் உணவு உடை பிரச்சினை பற்றி கவலைபட தேவையில்லை. ஆனால் பொருளாதார வளர்சசியுடன் புதிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கலை......நீங்கள் சொல்வது எனக்கு புரிய வில்லை. முன்பு நன்றாக வாழ வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர். இப்போது சமூகம் முன்னேறியுள்ளது. வாழ்க்கையில் கவலைபடுத்தும் நிலை குறைந்துள்ளது. இப்போது எதையும் பற்றி எதற்காக கவலைபட வேண்டும்?

ராஜாராம்.....உங்கள் கருத்து கேள்விக்குரியது. இப்போது மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ள போதிலும். சிக்கனம் என்பதை மறக்க கூடாது. ஏனேன்றால், பூமிக் கோளத்தில் மூல வள பற்றாக்குறை, எரியாற்றல் பற்றாக் குறை போன்ற புதிய பற்றாக்குறைகள் தோன்றியுள்ளன. எனவே நன்றாக வாழும் வசதியான நிலைமையிலும் நாம் சிக்கனத்தை மறக்க கூடாது.

கலை......நீங்கள் சொன்னதை நான் முழுமையாக ஒப்பு கொள்கின்றேன். அன்றாட வாழ்க்கையில் சிக்கனம் தேவை என்பதை மனதில் என்றுமே வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பணிக்கு வரும் போது ஆடம்பர உடை அணியத் தேவயில்லை. சிற்றுண்டி உண்ணும் போது எளிமையான பேக்கில் வைக்கப்பட்ட சிற்றுண்டி தின்னலாம். அவ்வளவு அழகாக பேக் செய்யத் தேவையில்லை. கோடைகாலத்தில் ஏசி எனப்படும் காற்று குளிர்விப்பு கருவியை பயன்படுத்தும் போது நிறையக் குளிர் தேவை இல்லை. அப்படிதானே.

ராஜாராம்.....இப்படி செயல்பட்டால் மட்டும் போதாது. சிக்கனம் என்பது சமூகம் நிறுவுவது அதனால் நம்முடைய வாழ்க்கையில் என்ன மாற்றம் கொண்டு வர முடியும்? குடி மக்கள் என்ற முறையில் சிக்கனமான சமூகத்தை உருவாக்கிட நாம் என்ன செய்ய வேண்டும்? அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி சிக்கனப்படுத்த வேண்டும்?இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

1  2  3