• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-13 16:58:30    
சிக்கனமான சமூகம்

cri

ராஜாராம்.....துணை தலைவர் CHENG ZHI QUAN பின்வருமாறு வர்ணிக்கிறார். எதிர்காலத்தில் வெப்பத்தை தடுக்கும் அல்லது வெப்பத்தை நிலைநிறுத்தும் எரியாற்றல் சிக்கனம் உள்ள வீடுகளை மக்கள் தேர்வு செய்வர். சிக்கனக் குறைவாக அதிகமாகச் செலவுபிடிக்கும் பாரம்பரிய ரக வீடுகள் உள்ள விடச் சந்தையிலிருந்து வெளியேற்றப்படும்.

கலை.....அடுத்து எரியாற்றல் சிக்கனம் வீட்டு பயன்பாட்டு மின்சார கருவிகளும் சூரிய சக்தி மின் கருவிகளும் குடும்பங்களில் பயன்படுத்தப்படும். குடும்பங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை வீணாக்காமல் சுத்திகரித்து துணி துவைப்பு, குளிப்பது, பூச் செடிகளுக்கு நீர் ஊற்றுவது, கழிப்பறை சுத்தம் போன்றவற்றுக்கு மறு உபயோகம் செய்யலாம்.

ராஜாராம்.....மேலும், வீட்டில் பயன்படுத்தப்பட்ட பழைய மின்சார கருவிகள், வீட்டு சாமான்கள், பழைய சட்டைகள் ஆகியவற்றை சமூக சேவை அமைப்புக்களுக்கு கொடுத்து விடலாம். வீட்டு கழிவுகள், மின்சார விசிறி, விளக்கு போன்ற நச்சு நிறைந்த பொருட்களை நுணுக்கமாக பகுதி பகுதியாக பிரித்து உகந்த முறையில் கையாளலாம்.

கலை......அன்றாட வாழ்க்கையில் மக்கள் செலவு குறைந்த மாசற்ற போக்குவரத்து சாதனங்களை தெரிவு செய்து வெளியே பயணம் செய்கலாம். வீட்டு தகவல் மயமாக்கம் மற்றும் அறிவுத் திறன் வளர்வதுடன் மேலும் அதிகமானோர் வீட்டில் அலுவலில் ஈடுபடுவர். இப்படி செயல்பட்டால் சமூக செலவு பெரிதும் சிக்கனப்படுத்தப்படும்.

ராஜாராம்.....இது மட்டுமல்ல, அலுவலகத்தில் தாள் இல்லாத அலுவல் பரவலாக்கப்படும். தங்கும் விடுதியில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் ஒப்பனைப் பொருட்கள் குறைக்கப்படும். மாறாக பல முறை பயன்படுத்த கூடிய சாதனங்களை பயன்படுத்துவது பரவலாக்கப்படும்.

கலை.....ஆகவே சிக்கன சமூகத்தில் வழக்கமான வாழ்க்கை முறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.

ராஜாராம்.....இவ்வாறாக புதுவகையான வாழ்க்கை உருவாகும். சிக்கனம் என்பது மக்களின் வாழ்க்கைக்கு மேலும் அருமையான இன்பத்தை ஏற்படுத்துவது திண்ணம். அல்லவா.


1  2  3