• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-13 16:58:30    
சிக்கனமான சமூகம்

cri

கலை......நல்ல வினாக்கள் கேட்டீர்கள். புரிந்த வரை நான் என் கருத்தை சொல்லலாமா?

ராஜாராம்......தாராளமாக சொல்லுங்கள்.

கலை......சிக்கனமான சமூகத்தை நிறுவும் போது மக்கள் பல்வகை சிக்கன நடவடிக்கைகள் மூலம் இந்த கருத்தை நடைமுறைபடுத்த லாம். எரியாற்றல் சிக்கனம் மூலம் சுற்று சூழல் மாசுபடுவதை குறைக்கலாம். வாழ்க்கை சூழலை பாதுகாத்து மற்றவர்களுக்கு தூய்மையான ஆரோக்கியமான சூழலை உருவாக்கலாம்.

ராஜாராம்.....இது பற்றி கூறும் போது தற்போதைய வாழ்க்கை தரத்தைக் குறைக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. அதேவேளையில் முன்புபோல தரமற்ற வாழ்க்கை வாழத் தேவையில்லை. இது சமூகத்தின் கோரிக்கை மட்டுமல்ல அரசின் ஆவணத்திலும் சிக்கன சமூகத்தை உருவாக்கும் கண்ணோட்டம், நோக்கம் பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

கலை......நீங்கள் எமது நேயர்களுக்கு எடுத்து கூறுங்கள்.

ராஜாராம்.....மூல வள சிக்கனம் என்றால், உற்பத்தி, பரிமாற்றம், நுகர்வு முதலிய துறைகளில் சட்டம், பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவை நிறைந்த பன்னோக்க நடவடிக்கைகளின் மூலம், மூல வளப் பயன்பாட்டை உயர்த்த வேண்டும். குறைந்த வளத்தைக் கொண்டு மிக பெரிய பொருளாதார மற்றும் சமூக பயனை அடைய வேண்டும் தொடர்ச்சியான சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மூல வள சிக்கன சமூகத்தை நிறுவுவதன் நோக்கமானது, குறைந்த சுற்றுசூழல் சீர்கேடு, மிக பெரிய பொருளாதார மற்றும் சமூக பயன் ஆகியவற்றுடன் தொடர்ச்சியான வளர்ச்சியை நிறைவேற்றுவதாகும்.

கலை.....இது மட்டுமல்ல சீனாவின் குவாந்து மாநிலத்தின்

தொடர்ச்சியான வளர்ச்சி ஆய்வகத்தின் துணை தலைவர் CHENG ZHI QUAN எதிர்காலத்தில் சிக்கன சமூகம் பற்றி வரைந்த நிழற்படத்தை பார்க்கலாமா?

ராஜாராம்.....இது பற்றி நான் நேயர்களுக்கு சொல்லலாமா?

கலை......சொலுங்கள்.

1  2  3