• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-21 09:17:28    
திபெத் சமூக அமைப்புமுறையின் மாற்றம்

cri

நாள்தோறும் காலை செலின்ராமு அம்மையார் மிகவும் விரும்பி பாடும் பாடல், இதுவாகும். 80 வயதுக்குட்பட்ட அவர், திபெத்தின் லோகா பிரதேசத்தின் ஒரு சிறிய மாவட்ட நகரில் வாழ்கின்றார். அமைதியான வாழ்வில் பாட்டொலி மூலம் தமது உணர்வினை தெரிவிக்க அவர் மிகவும் விரும்புகின்றார். 40 ஆண்டுகளுக்கு முன்னர், திபெத்தில் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை தோட்டத்தில் ஒரு அடிமையாக, தாம் இருந்ததாகவும், உரிமையாளர் அவரை பேசவல்ல ஒரு கால்நடையாகக் கருதியதாகவும் அவர் சொன்னார். ஏதாவது ஒரு நாளில், ஆடுகளையும் மாடுகளையும் நிலத்தையும் சொந்தமாக்க முடியும் என்றும், பின்னர், திபெத்தின் உள்ளூர் அதிகார நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவராக இருக்க முடியும் என்றும் தாம் நினைத்துப்பார்க்கவே இல்லை என்றார் அவர்.

செலின்ராமு அம்மையாரின் அனுபவம், திபெத்தில் காணக்கிடைக்காதது அல்ல. முந்திய அடிமைகள் அனைவரும், அவரை போல தலைமை பதவி வகிக்கின்றனர் இல்லாவிட்டாலும், அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது என்பது உண்மையே. இன்று, திபெத், நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமுதாயத்திலிருந்து விடுபட்டு, சோஷலிச சமூகத்தில் நுழைந்தது பற்றி கூறுகின்றோம்.

தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள திபெத், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், அரசியலும் மதமும் கலந்து ஆதிக்கம் செலுத்திய நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமுதாயத்தில் இருந்தது. திபெத் மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்குள்பட்ட மூன்று வகை பண்ணை சொந்தக்காரர்கள், அதாவது, பிரபுக்கள், உள்ளூர் அரசு அதிகாரிகள், உயர்நிலை மதகுருமார்கள், திபெத்தின் 95 விழுக்காட்டுக்கு மேலான நிலம் மற்றும் உற்பத்தி சாதனங்களைக் கைபற்றியிருந்தனர். ஆனால், திபெத்தின் மொத்த மக்கள் தொகையில் 95 விழுக்காட்டுக்கும் அதிகமான பண்ணை அடிமைகளும் இதர அடிமைகளும் தனிநபர் சுதந்திரமின்றி உற்பத்தி சாதனங்கள் ஏதுவும் இல்லாமல் அல்லல்பட்டனர். அவர்கள் மற்றவரால் வாங்கப்பட்டனர் அல்லது விற்கப்பட்டனர்.

1  2  3