• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-21 09:17:28    
திபெத் சமூக அமைப்புமுறையின் மாற்றம்

cri

1949ம் ஆண்டு அக்டோபர் முதலாம் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. நவ சீனா நிறுவப்படுவதற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, "பொது வேலைத்திட்டத்திற்கிணங்க நவ சீனாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் சம உரிமையும் கடமையும்"உண்டு. தேசிய இனங்கள் சமமானவை. தேசிய இன ஒற்றுமை, தேசிய இன பிரதேசத் தன்னாட்சி என்ற கொள்கையும், மத நம்பிக்கைச் சுதந்திரம் என்ற கொள்கையும் மேற்கொள்ளப்பட்டன. 1951ம் ஆண்டு மே திங்கள் 23ம் நாள் நடுவண் அரசு, திபெத் உள்ளூர் அரசுடன் பெய்ஜிங்கில் திபெத்தின் சமாதான விடுதலை பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. இதுவே, பிரபலமான 17 உடன்படிக்கைகள் எனபடுகிறது. இதனுடன் திபெத் அமைதியான முறையில் விடுதலை பெற்றது.

திபெத்தின் புகழ்பெற்ற வரலாற்று இயல் அறிஞர் பாசாங் வாங்து பேசுகையில், 17 உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டது, திபெத் வரலாற்றில் ஒரு பாய்ச்சல் முன்னேற்றத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்றார். அவர் கூறியதாவது

திபெத், சமாதான முறையில் விடுதலை பெற்றது. அரசிறைமையின் ஒருமைப்பாட்டையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் இது பேணிக்காத்து, திபெத் இனத்துக்கும் நாட்டின் பல்வேறு தேசிய இனங்களுக்குமிடையிலான சமத்துவம் ஐக்கியம் ஆகியவற்றை நனவாக்கியுள்ளது என்றார்.

திபெத் பற்றிய பல்வேறு சீர்திருத்தங்கள் மீது நடுவண் அரசு நர்ப்பந்தத்தை திணிக்கவில்லை. திபெத் உள்ளூர் அரசு, சுயமாக சீர்திருத்தம் செய்ய வேண்டும். மக்கள், சீர்திருத்தக் கோரிக்கை முன்வைத்தால், திபெத்தின் தலைவர்களுடன் கலந்தாய்வு முலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்த 17 உடன்படிக்கைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, திபெத் சமாதான விடுதலை பெற்றதற்கு பிந்திய பல ஆண்டுகளிலும் திபெத்தில் நலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறை நிலவியது என்று அவர் விளக்கிக்கூறினார்.

1955ம் ஆண்டு மார்ச்ச திங்களில், சீனத் தலைவர் மா சே தூங் முன்மொழிந்த படி, திபெத்தின் இரண்டு முக்கிய மத தலைவர்களான 14வது தலாய்லாமா, பத்தாவது பான்ச்சான் ஆகியோரின் ஒப்புதலுடன் திபெத் தன்னாட்சி பிரதேசத்துக்கான ஆயத்த கமிட்டியை நிறுவ நடவண் அரசு முடிவு மேற்கொண்டது. தலாய்லாமா, இக்கமிட்டியின் தலைவராகவும் பான்ச்சான் இக்கமிட்டியின் முதலாவது துணை தலைவராகவும் பதவி வகிக்க வேண்டும் என தீர்மானித்தது. ஓராண்டுக்குப் பின், இக்கமிட்டி லாசாவில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இதில் மொத்தம் 51 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 48 பேர் திபெத் இனத்தவர்களாவர். இதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நடுவண் அரசு, அப்போதைய துமை தலைமை அமைச்சர் சென் யீயை அங்கு அனுப்பியது.

1  2  3