
சமாதான விடுதலை பெற்ற பின், திபெத் இரண்டு பெரும் இன்னல்களை எதிர்நோக்கிறது. ஒன்று. அப்போது, திபெத் மக்கள் வாழ்க்கை மிகவும் வறுமையாக இருந்தது. வளர்ச்சியும் சீர்திருத்தமும் அவசரமாகத் தேவைப்பட்டன. மறுபுறம், வரலாறு, மதம் முதலிய சிறப்பு காரணிகளினாலும், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய வெளிநாட்டு சகதிகளின் நீண்டகாலமாக தூபம் போட்டதாலும், திபெத், ஹன் இன மக்களிடையே கடும் வேற்றுமை நிலவி வந்தது.
1959ம் ஆண்டு ஜுன் திங்கள் முதல், சீன நடுவண் அரசு, சுமார் இரண்டு ஆண்டுகாலம் திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடத்தியது.
திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தம் காரணமாக, நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்புமுறை வேரோடு கிள்ளி எறியப்பட்டது. வட்சக்கணக்கான பண்ணை அடிமைகள், கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பெற விரும்பிய நிலம், கால்நடை உள்ளிட்ட அடிப்படை உற்பத்தி சாதனங்களை பெற முடிந்தது.

இது மட்டுமின்றி, திபெத் சமூகத்திலும் இது மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்தது என்று பாசான் வாங்து கருத்து தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதி என்ற முறையில், திபெத் சோஷலிச புரட்சியிலும் வளர்ச்சியிலும் ஈடுபடத் துவங்கியது. திபெத் சமூகத்தில் அரசியல், மதத்திலிருந்து பிரிக்கப்பட்டது. மதம் என்பது, திபெத் சமூகத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றை ஆட்டிப்படைக்க முடியாது என்றார் அவர்.
ஜனநாயகச் சீர்திருத்தத்தின் மூலம், சீனாவின் இதர பிதேசத்து பல்வேறு தேசிய இன மக்களைப் போலவே, திபெத் மக்களும் சமமான அரசியல் உரிமையை அனுபவிக்கின்றனர். 1961ம் ஆண்டு திபெத்தின் பல்வேறு இடங்களில் வரலாற்றில் முதல் தடவையாக, பொது தேர்தல் நடைபெற்றது. 1965ம் ஆண்டு செப்டம்பரில் திபெத்தன்னாட்சிப் பிரதேசத்தின் முதலாவது மக்கள் பேரவையின் முதலாவது கூட்டம் லாசாவில் நடைபெற்றது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்து தன்னாட்சி அமைப்பு அதன் தலைவர்களும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1 2 3
|