இவ்வாண்டு சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவாகும். கடந்த 50 ஆண்டுகளாக, சீன நடுவண் அரசின் பெரும் ஆதரவுடனும், சிங்கியாங்கில் பல்வேறு தேசிய இன மக்களின் கூட்டு முயற்சிகளுடனும், சீனாவின் மொத்த பரப்பில் ஆறில் ஒரு பகுதியாக உள்ள சிங்கியாங்கில், பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
17 வயதான Muhetaer ஒரு கஜாக் இன மாணவர். சீனியர் பள்ளியில் 3ஆம் ஆண்டில் அவர் கல்வி பயில்கின்றார். சிங்கியாங் ஆல்தைய் முதலாவது இடை நிலைப் பள்ளியின் அகலமான வகுப்பறையில் அவர் தனது எதிர்காலம் மீது முழு எதிர்பார்ப்பு கொண்டிருக்கின்றார். அவர் கூறியதாவது:
"இங்கு எங்கள் கல்வி வசதி சிறப்பாக உள்ளது. அடுத்த ஆண்டு, சிங் ஹுவா பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறையில் சேர நான் ஆயத்தம் செய்கின்றேன். எதிர்காலத்தில் கிணித நிபுணராக மாற நான் விரும்புகின்றேன். இது வரை தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்த்து, நாட்டுக்காக பயனளிக்க விரும்புகின்றேன்." என்றார் அவர்.
ஆல்தைய் பிரதேசம் முழுவதிலும் பத்தாயிரக்கணக்கான கஜாக் இன மாணவர்கள் மிக பெரிய கஜாக் மொழி பள்ளியில் பயின்று உயர் கல்வி நிலையங்களுக்குச் சென்று, பல்வேறு துறைகளில் திறமைசாலிகளாக ஆகின்றனர்.
50 ஆண்டுகளுக்கு முன், சிங்கியாங்கில் சாதாரண குடும்பங்களின் குழந்தைகளுக்கு பள்ளியில் கல்வி பயிலும் வாய்ப்பு குறைவாக இருந்தது. 1949ஆம் ஆண்டில், சிங்கியாங் முழுவதிலும், ஓரு உயர் கல்வி நிலையமும், 11 இடைநிலை பள்ளிகளும் மட்டுமே இருந்தன. சிங்கியாங்கில் 90 விழுக்காட்டினர் எழுதப்படிக்க முடியாமல் இருந்தனர். 50 ஆண்டுகால வளர்ச்சி மூலம், சிங்கியாங்கின் கல்வி நிலைமையில் தலைகீழான மாற்றம் தோன்றியுள்ளது. தற்போது சிங்கியாங்கில் பல்வேறு நிலை பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 8600 ஆகும். சுமார் 44 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர். அவர்களில் 60 விழுக்காட்டினர், சிறுபான்மைத் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு, சிங்கியாங்கின் அனைத்து வறிய பிரதேசங்களில் தொடக்க பள்ளிகள் மற்றும் இடைநிலை பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவச கல்வியை தருவதற்காக, நடுவண் அரசு 14 கோடி யுவானை ஒதுக்கியது. கல்வியின் பரவலினால், தற்போது சிங்கியாங்கில் படிப்பறிவு இல்லாதோர் விகிதம் 2 விழுக்காட்டுக்கு குறைந்து விட்டது.
1 2 3
|