• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-24 21:43:56    
சிங்கியாங்கின் வளர்ச்சிக்காக சீன நடுவண் அரசின் பெரும் ஆதரவு

cri

கல்வியைப் போலவே, சிங்கியாங்கில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றன. தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 50 ஆண்டுகளில், நீர் சேமிப்பு, போக்குவரத்து, அஞ்சல் தொடர்பு, உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வலுப்படுத்த, நடுவண் அரசும் தன்னாட்சி பிரதேச அரசும் பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சிங்கியாங்கில், நிலையான சொத்துக்களில் செய்யப்பட்ட மொத்த முதலீடு, 78 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இதில் சுமார் 50 விழுக்காடு, நடுவண் அரசின் முதலீடாகும். தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட துவக்கத்தில், இங்கு சில நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன. இருப்புப்பாதை இல்லை. கழுதைகளும், ஒட்டகங்களும் மக்களின் முக்கிய போக்குவரத்து சாதனங்களாக இருந்தன. ஐம்பது ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், தற்போது, இருப்புப்பாதை, நெடுஞ்சாலை, விமானம் உள்ளிட்ட நவீன போக்குவரத்து வசதிகளின் தொடரமைப்பு சிங்கியாங்கில் உருவெடுத்துள்ளது. இதில், மொத்த நெடுஞ்சாலை நீளம், 86 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ள இருப்புப்பாதையின் மொத்த தூரம் சுமார் மூவாயிரம் கிலோமீட்டர் ஆகும். சிங்கியாங் பயணி விமான போக்குவரத்து, உள் நாட்டு வெளிநாட்டு 60 பெரிய மற்றும் நடுத்தர நகரங்களை இணைக்கின்றது. போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ள இதன் மொத்த தூரம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. சிங்கியாங், சீனாவில் விமான போக்குவரத்து மிகவும் தொலைதூரமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாகும்.

சிங்கியாங் போக்குவரத்து மாற்றம் பற்றி, சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் Simayi Tieliwaer கூறியதாவது:

"50ம் ஆண்டுகளில், உள் நாட்டு வெளிநாட்டு மக்கள், சிங்கியாங் ஒதுக்குப்புறமான இடம் என கருதினர். கடந்த 50 ஆண்டுகளில் சிங்கியாங்கின் பல்வேறு தேசிய இன மக்கள் ஒன்றுபட்டு போராடியதன் மூலம், இந்த நிலை மாறியது. 1962ஆம் ஆண்டில், தென் சிங்கியாங்கின் Kashi நகரிலிருந்து உருமுச்சிக்கு செல்ல, லாரியில் 7 நாட்கள் பயணம் செய்யவேண்டி இருந்தது. இப்போது, உருமுச்சியிலிருந்து Kashiக்கு, விமானத்தில் ஒன்றரை மணி நேரத்தில் சென்று விடலாம்." என்றார் அவர்.

1  2  3