அடிப்படை வசதிகள் விரைவாக வளர்ச்சியுற்று வருவதுடன், சிங்கியாங்கில் முதலீட்டுச்சூழல் தெள்ளத்தெளிவாக மேம்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சிங்கியாங்கில் சமூகத்தின் நிலையான சொத்துக்களில் மூதலீடு சராசரியாக ஆண்டுக்கு சுமார் 20 விழுக்காட்டை அதிகரித்துள்ளது. பல முக்கிய திட்டப்பணிகளின் நடைமுறையாக்கத்துடன், சீனாவில் முக்கிய வேளாண்மை, எரியாற்றல் மற்றும் வர்த்தக தளமாக சிங்கியாங் மாறி விட்டது. கடந்த ஆண்டு, சிங்கியாங்கில் மொத்த உள் நாட்டு உற்பத்தி 22 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது, 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சுமார் 40 மடங்கு அதிகமாகும். சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் கட்சி கமிட்டிச் செயலாளர் Wang Le Quan செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியுற்று வருவதால், சிங்கியாங்கின் பல்வேறு தேசிய இன மக்கள் நலனை பெற்றுள்ளனர் என்றார். அவர் கூறியதாவது:
"பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியுற்று வருவதால், மக்களின் வாழ்க்கை நிலை சீராக உயர்ந்து வருகின்றது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி அமலாக்கத்துக்கு வந்த கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சிங்கியாங்கின் பல்வேறு இன மக்கள் பெற்றுள்ள நலன் மிக அதிகம். அன்றாட பொருட்கள் பல்வகையாக விநியோகிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இன மக்களின் வாழ்க்கை தரமும், குடியிருப்பு நிலைமையும் மேலும் மேம்பட்டு வருகின்றன. நகரங்கள் மற்றும் கிராமங்களின் குடி மக்களின் நுகர்வு நிலை குறிப்பிடத்தக்கவாறு உயர்ந்துள்ளது." என்றார் அவர்.
சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேச அரசின் வளர்ச்சி திட்டத்தின் படி, இனிமேல், சிங்கியாங்கில் அடிப்படை வசதிகளின் வளர்ச்சி விரைவுபடுத்தப்படும். அங்குள்ள மூலவள மேம்பாடு, பொருளாதார மேம்பாடாக மாறப்படும். 2020ஆம் ஆண்டுக்குள், சிங்கியாங்கில் மொத்த உள் நாட்டு உற்பத்தி 42 ஆயிரம் கோடி யுவானை எட்டக்கூடும். சிங்கியாங், நாட்டின் இதர இடங்களுடன் இணைந்து, ஓரளவு வசதிபடைத்த சமூகமாக மாறும். இங்குள்ள பல்வேறு இன மக்கள் மேலும் வளம் பெறுவார்கள். 1 2 3
|