• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-27 09:41:06    
சீனாவின் பழங்கால வீடுகள்

cri

சீனாவின் அன்ஹுவெய் மாநிலத்தைச் சேர்ந்த யிசியெ மாவட்டம், செசியெ மாவட்டம் ஆகியவற்றுக்கு அருகில், மிங் வமிச மற்றும் சிங் வமிச கால கிராமங்கள் அமைந்துள்ளன. அவற்றில், சுமார் நூறு ஆணஅடு வரலாறுடைய பழைய வீடுகள் எங்கெங்கும் காணப்படுகின்றன. உலக வரலாற்று பண்பாட்டு மரபுச் செல்வம் என யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ஹொங்சன் கிராமம் அன்ஹுவெய் மாநிலத்தில் மிக அழகான பழங்கால கிராமமாகும். 500 ஆண்டுகள் வரலாறுடைய இந்த சிற்றூர் இம்மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள குன்று பிரதேசத்தில் அமைகின்றது. ஹொங்சன் கிராமத்தில், மிங் வமிச மற்றும் சிங் வமிச காலவங்களில் கட்டப்பட்ட 300க்கும் அதிகமான வீடுகள் இன்றுவரை பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. வெள்ளை சுவர், குறுப்பு ஓடு ஆகியவற்றைக் கண்டு, இந்த வீடுகளில் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் நீண்ட வரலாற்றை அறிந்துகொள்ளலாம். பின்யௌ நகரம், சான்சி மாநிலத்தில் சிறிதும் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட ஒரு பழைய நகரமாகும். அதில உள்நாட்டில் மிகவும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட மிங் வமிச கால நகரச் சுவர், சதுர முற்றத்துடன் கூடிய பழங்கால மாளிகை, ஆயிரம் ஆண்டு வரலாறுடைய தௌ மத கோயில் ஆகியவை உள்ளன.

இந்நகரில், சியௌ குடும்ப மாளிகை, மிகப் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு பழங்கால கட்டடமாகும். சியௌசியாபௌ கிராமத்தின் மையத்தில் இந்த மாளிகை அமைந்துள்ளது. நாலாப் புறமும் 9 மீட்டர் உயரமுடைய செங்கல் சுவராகும். கதவு, கிழக்கை நோக்கி கட்டியமைக்கப்படுகின்றது. மாளிகையின் உச்சி பகுதி உயரமாகவும் தாழ்வாரம் அகலமாகவும் நீளமாகவும் இருக்கின்றன. கதவுக்கு மேல், எழுத்தக்களுடன் கூடிய ஒரு பலகையும் இரு பக்கங்களில் ஈரடி செய்யுள்ளும் காணப்படுகின்றன. வாசலின் எதிரே, செங்கல்களில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட நீண்ட ஆயுள் எனும் படங்கள் இருக்கின்றன. அதில், பல்வடிவங்களில் செதுக்கப்பட்ட நீண்ட ஆயுள் என்பதை வெளிப்படுத்தும் நூறு சீன எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. இந்த மாளிகை, மொத்தம் ஆறு பகுதிகள் பிரிக்கப்படுகின்றன.

1  2  3