
சியௌ குடும்ப மாளிகை, சிங் வமிச காலத்தின் சியாசிங் மற்றும் தௌகுவான் பேரரசர் ஆட்சிகாலத்தில் அதாவது 1796ஆம் ஆண்டு முதல் 1821ஆம் ஆண்டு வரையான காலத்தில் கட்டப்பட்டது. இந்த மாளிகையின் உரிமையாளர் ஈட்டிய செல்வம் அதிகரிக்க அதிகரிக்க அது 6 பெரிய பகுதிகளையும் 20சிறிய பகுதிகளையும் 313 அறைகளையும் கொண்ட மொத்தம் 8700 சதுர மீட்டர் பரப்பளவுடைய மிக பெரிய குடியிருப்பு வீடாக விரிவாக்கப்பட்டது. அதன் அளவு, கட்டமைவு, அலங்காரம் ஆகியவை, வட சீனாவின் வீட்டுக் கட்டடக் கலையிலான முத்து எனும் புகழுக்குப் பொருத்தமானவை. பெங்குவாங் நகரம் ஹுனான் மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமையும் ஒரு பழங்கால நகரமாகும். சீனாவின் மிக அழகான சிறு நகரங்களில் ஒன்று என நியூசிலாந்து எழுத்தாளர் லுயிஎரி அதைப் போற்றினார்.

சிங் வமிசத்தின் கான்சி பேரரசர் ஆட்சி காலத்தில் அதாவது ஏறக்குறைய 1662ஆம் ஆண்டில், மேற்கு ஹுனான் மாநிலத்தின் முத்து என போற்றத் தக்க இந்த சிறு நகரம் கட்டப்பட்ட்து. இந்நகரில், கிழக்கிலிருந்து மேற்குக்குச் செல்லும் ஒரே ஒரு வீதி இருக்கின்றது. இந்த பழங்கால நகரம் புதிய பகுதி, பழைய பகுதி என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. பழைய பகுதி மலையின் அடிவாரத்தில் உள்ளது. தெளிந்த துஓசியாங் ஆறு, இந்நகருக்கு ஊடாக ஓடுகின்றது. அந்தி வேளையில்பாலத்தின் பக்கத்திலும் ஆற்றங்கரையிலும் மகளிர் தடியால் ஆடையை அடித்த வண்ணம், சலவை செய்கிறார்கள். தடியடி ஓசையும் நீரலை ஓசையும் வெகு தூரத்துக்கப் பரவுகின்றன. குழந்தைகள் ஆற்றில் விளையாடுகின்றனர். இவையனைத்தும், இந்நகருக்கு அழமாக காட்சியொன்றை அளிக்கின்றது.
1 2 3
|