
இந்தப் பழங்கால நகரில், பழமை வாய்ந்த, துச்சியா இன மணம் கமழும் வீடு மிகவும் புகழ் பெற்றது. ஆனால், ஆற்றங்கரையில் அமைந்த இத்தகைய வீடுகள் பல, அழிந்துவிட்டன. தற்போது, ஹுவெய்லுங்தென் எனும் இடத்தில் மட்டும் இன்னும் பத்து இத்தகைய பழைய வீடுகள் காணப்படுகின்றன. இதுவரை, சீனாவின் சில பழைய நகரங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த நகரங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. கட்டடங்களின் பாணி, பண்பாடு, அங்குள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவை வேறுபட்டவை. ஒவ்வொரு இடத்துக்கும் தனிச்சிறப்பியல்பு உண்டு. பயணிகள் இந்த இடங்களுக்கு வருகை தந்தால், அவர்களுக்கு வேறுபட்ட பட்டறிவு ஏற்படும். இனி சுற்றுலா பற்றிய தகவல் சாங்காய் மாநகரின் நாங்சிங் துங்லு வெய்தானுக்கும் புதுங் கீழை முத்துக் கோபுரத்துக்குமிடையில் கட்டியமைக்கப்பட்டுள்ள வெய்தான் சுற்றுலா குடைவழியின் முழு நீளம் 646.70 மீட்டராகும். இது, சீனாவில் வாங்புசியாங் ஆற்றைக் கடந்துசெல்லும் முதலாவது செயற்கை குடைவழியாகும். 1 2 3
|