
மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்து யிசாங் நகரிலுள்ள சிகுவெய் மாவட்டத்தில் சியுவான்சி காட்சித்தலம் அமைந்துள்ளது. துருவி ஆராய்வது, பொழுதுபோக்கு, சுற்றுப்பயணம் ஆகியவை தழுவிய உயிரின பொழுது போக்கு மண்டலமாக இத்தலம் திகழ்கின்றது. தெப்பப் பயணம், இக்காட்சித் தலத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா நிகழச்சியாகும். உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கூடாக சியுவான்சி சிற்றாறு ஓடுகின்றது. அதன் நீண்ட இரு கரையோரத்தில் எழிலான காட்சி தென்படுகிறது. தெப்பப் பயணத்துக்கு இது மிகவும் பொருத்தமானது. சிகுவெய் மாவட்ட சுற்றுலாப் பயணத்துறையின் தலைவர் சாய்க்ச்சுவான் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது, யாங்சி ஆற்றின் மு மலை இடுக்கு பிரதேசத்தில் மிகவும் சிறந்த தெப்பப் பயண நிகழ்ச்சி இதுவாகும். பயணிகள், தானே பங்கெடுத்து, ஓட்டலாம்.

ஒவ்வொருவரும், பயணிகளுக்கென தயாரிக்கப்பட்ட மேல் சட்டை, யூனியன் அரைக் கால் சட்டை மற்றும் காலணியை வேண்டும். பின், பாதுகாப்புக்கான ஆடையையும் தொப்பியையும் அணிய வேண்டும். இரண்டு பயணிகள் ஒரு தெப்பத்தில் பயணம் துவக்குவர். பயணப் போக்கில், தெப்பப் பயணத்தின் மகிழ்வை நேரில் உணர்ந்து கொள்ளும் அதே வைளையில், இரு கரையோர எழிலான இயற்கை காட்சியைக் கண்டுகளிக்கலாம். 7 கிலோமீட்டர் நீள தெப்பபயணப்போக்கில், தீவிர நீரோட்டம் மற்றும் அபாயகரமான நீர்ப்பரப்பைச் சந்திக்கலாம். அமைதியான ஆழமான குளமும் காணப்படும். 1 2 3
|