 இப்பயணம் பற்றி, பயணிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். பலர், ஒருமுறை மட்டுமல்ல, பல முறை தெப்பப் பயணம் செய்தனர். நான் வரவேற்ற பல பயணிகள், ஒரு முறை தெப்பபயணம் செய்துள்ளனர். பின்னர், என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் வருவதாகத் தெரிவித்தனர். சியுவான்சி காட்சித் தலத்தில், தெப்பப் பயணம் தவிர, துச்சியா இன ஆடல்பாடலும் மிகுதியும் தனித்துவம் வாய்ந்தது. இளைஞர்களின் இனிய பாடல்களும் மங்கையர்களின் மனமுருகும் ஆடல்களும் பயணிகளின் மனதில் ஆழப்பதிந்துள்ளன. மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கத் தோன்றும். சியுவான்சி காட்சித் தலத்துக்கு வருகை தரும் போது, அங்குள்ள நான்கு முக்கிய வட்டார உற்பத்திப்பொருட்களை வாங்கத் தவற வேண்டாம். தேயிலை, கிச்சிலிப்பழம், orchid மலர், கல் ஆகியவை இந்நான்கு பொருட்களாகும். அங்குள்ள தேயிலை, தலை சிறந்தது எனப் பாராட்டப்படுகின்றது. 1 2 3
|