
தத்தமது அக்கறைக்கிணங்க, சுமார் 3 மணி நேரம் நேரத்தை எப்படி கழிப்பது என்பதைப் பயணிகள் தீர்மானிக்கலாம். முழு மூச்சுடன் தெப்பத்தை ஓட்டுகையில், இயற்கைக்கு அறைகூவல் விடுப்பதில் ஆனந்தத்தை அனுபவிக்கலாம். தவிர, அமர்ந்த வண்ணம், நீரோட்ட்ததுடன் தெப்பப் பயணம் செய்யலாம். பெரும் அலை அல்லது தீவிர நீரோட்டம் என்ற நிலையில் இருக்கும் போதும் பயப்பட வேண்டாம். தலையில் மூங்கில் பட்டையான தொப்பி அணிந்த கையில் மூங்கில் கோலைக் கொண்ட காவலர்கள் இருப்பர். பயணிகள் அபாய நிலையில் இருக்கும் போது, அவர்கள் உதவிடுவர். தெப்பம் இல்லல் நிலையிலிருந்து விடுபட்டு, தொட்ரந்து முன்னேற முடியும். சியுவான் சிற்றாற்றின் கரையோரத்தின் ஆழமற்ற மணல் காட்சித்தலம், பயணிகளுக்கெனஸ, சில ஓய்விடங்களை நிறுவியுளளது. இங்கு பயணிகள் தற்காலிகமாகக் காற்றையும் அலையையும் தவிர்த்த, தமது பொருட்களை ஒழுங்கு செய்யலாம். உள்ளூர் குடி மக்கள் விற்கும் பழவகைகளும் வேளாளர் குடும்பம் தயாரிக்கும் சுவைப்பொருளும் ருசியானவை. அன்றி, விலையும் மலிவு.

தெப்பப் பயணத்தின் போது ஆடைகள் ஈரமானால் பயணிகளுக்கு குளிர் உணர்வு ஏற்படலாம். அப்படியானால், மலை வாவ் மக்களால் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட மச்சாச் சோள மதுவை அருந்தி, குறிரைப்போக்கலாம். பயணிகள் சிலர், மதுவையும் ஈச்சம் பழத்தையும் வாங்கி, குளம் அருகில் அம்ரந்து மதுவைச் சுவைத்துக்கொண்டே இயற்கைக் காட்சியைக் கண்டுகளிப்பார்கள். பெய்ச்சிங்கைச் சேர்ந்த மென்தேவெய் என்னும் பயணி, கரை ஏறிய பின்னரும், தமது மகிழச்சிச உணர்வை மறைக்க முடியவில்லை. அவர் கூறியதாவது, சிறந்த ஆட்டம், சிறந்த ஆட்டமே. அதிர்ச்சி இருந்தாலும், அபாயம் ஏற்படவில்லை. மிகவும் அதிசயம். வாய்ப்பு ஏற்படும் போது, அடுத்த ஆண்டு நான் இங்கு வருவேன் என்றார். சிகுவெய் மாவட்ட போக்குவரத்து சுற்றுலா நிலையத்தைச் சேர்ந்த பயண வழிகாட்டி சியான்யுன் தெப்பப்பயணம் பற்றிக் குறிப்பிடுகையில், பயணிகள் பலர், மீண்டும் மீண்டும் தெப்பப்யணத்துக்காக எங்கள் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாகக் கூறினார். 1 2 3
|