• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-01 10:32:45    
உயிர்துடிப்பு மிக்க புதிய உயர் தொழில் நுட்ப மண்டலம்

cri

புதிய உயர் தொழில் நுட்ப துறையின் வளர்ச்சியைத் தூண்டும் வகையில் 15 ஆண்டுகளுக்கு முன் சீனா முன்னேறிய வெளிநாட்டு வழி முறைகளைப் பின்பற்றி 50க்கும் அதிகமான நாட்டு நிலை புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலங்களை நிறுவியது. இவற்றில் மிகவும் வெற்றி பெற்றுள்ள சன்சுன் புதிய உயர் தொழில் நுட்ப துறை வளர்ச்சி மண்டலத்தை என்னுடன் பார்க்க வருகிறீர்களா?
சன்சுன் புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலம் சீன்வின் தென்பகுதியில் உள்ள குவாங்துங் மாநிலத்தின் சன்சுன் நகரில் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு 11 சதுர கிலோமீட்டர். மொத்தம் 1000க்கும் அதிகான தொழில் நிறுவனங்கள் மண்டலத்தில் உள்ளன. திரு லிங்போ இந்த மண்டலத்தின் நிர்வாக கமிட்டியின் பொறுப்பாளர்களில் ஒருவராவார். சுய நிர்ணய அறிவு சார் சொத்துரிமையை கொண்ட தொழில் நிறுவனங்களுக்குப் பயிற்சி தந்து வளர்ப்பது புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தின் குறிக்கோளாகும். இது பற்றி அவர் கூறியதாவது.
சுயநிர்ணய புத்தாக்கத்தில் ஊன்றி நின்று உலகில் முதலாவது நிலை உயர் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தை நிறுவுவது எங்கள் குறிக்கோளாகும். அதற்காக எங்கள் மண்டலத்தில் மிக முன்னேறிய புத்தாக்க சூழ்நிலை நிறைந்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் புத்தாக்க ஆற்றலைக் கொடுத்து சுயநிர்ணய அறிவு சார் சொத்துரிமையுடைய பொருட்களை தயாரிக்க நாங்கள் பணி புரிகின்றோம் என்றார் அவர்.
தொழில் நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்பு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வது வெளிநாடுகளில் உயர் அறிவியல் தொழில் நுட்ப துறை பெற்றுள்ள முக்கிய அனுபவங்களில் ஒன்றாகும். வளர்ச்சி எதிர்காலம் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படக் கூடிய பல்வகை சாதனங்களுடன் தொடர்புடைய சேவையை வழங்குவது அதன் முக்கிய செயல்பாடாகும். கடந்த பல ஆண்டுகளாக சன்சுன் புதிய உயர் அறிவியல் தொழில் நுட்ப மண்டல கமிட்டி இந்த செய்ல்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது. எடுத்துக்காட்டாக 2004ம் ஆண்டில் உயிரி தொழில் நுட்ப நிறுவனத்தை நிறுவிய போது பரிசோதனை மண்டலத்தில் கொதிகலந், ஆவி, சுத்த தன்னீர், அழுத்தப்பட்ட காற்று போன்ற பரிசோதநை சாதனங்களும் பயன்பாட்டு பொருட்களும் பொருத்தப்பட்டன.

1  2  3