• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-04 09:50:55    
காஷ்கர் முஸ்லிம் வாழ்க்கை

cri

காஷ்கர் நகரம், சிங்கியாங் விகுர் தன்னாட்சி பிரதேசத்தின் தென்பகுதியில் உள்ள இஸ்லாமிய பண்பாட்டு மையமாகும். இந்நகரில் சுமார் 34 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இந்நகரின் மொத்த மக்கள் தொகையில், 98 விழுக்காட்டிர்கள், முஸ்லிம்கள். அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் பற்றி அறிந்து கொள்ள செல்வோம்.

காஷ்கர் இஸ்லாமிய திருமறை பள்ளி, இஸ்லாமிய மத குருமார்களுக்கு பயிற்சி தர நிறுவப்பட்டது. பள்ளியின் வேந்தர் மகமதிகன் Abdula பேசுகையில், ஆண்டுதோறும், இப்பள்ளியில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவதாகக் கூறினார். மூன்றாண்டுகால படிப்பில், மாணவர்களின் முக்கிய பாடம், மதம் தான். தவிர, புவியியல், வரலாறு முதலியவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். படிப்பை முடித்துக்கொண்டு, குருமார்கள் பற்றாக்குறையாக உள்ள ஒதுக்குப்புறப் பிரதேசத்தில் மதப் பணி புரிய, அவர்கள் அனுப்பப்படுவர்.

கி. பி. பத்தாவது நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் மத்திய ஆசியாவிலிருந்து சீனாவில் பரவியது. தற்போது, காஷ்கர் பிரதேசத்தில் பெரியதும் சிறியதுமாக சுமார் பத்தாயிரம் மசூதிகள் இருக்கின்றன. பத்தாயிரம் பேர் இவற்றில் பணிபுரிகின்றனர். இங்கு வாழ்வோர், மசூதிகளில் வேலை செய்வதை, மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர்.

19 வயதான விகுர் இன இளைஞர் Abrati Wugul, காஷ்கர் இஸ்லாமிய திருமறை பள்ளியின் இரண்டாவது வகுப்பு மாணவர். பணக்காரக் குடும்பத்தில் அவர் பிறந்தார். அவரது தாயும் தந்தையும் நல்ல வருமானம் பெறுகின்றனர். மூன்று குழந்தைகளை வளர்ப்பதற்கு அவர்கள் சிறந்த நிலைமையில் உள்ளனர்.

அண்ணன் சிங்கியாங் வேளாண் கல்லூரியில் படித்து பட்டதாரி ஆகினார். அக்காள், சிங்கியாங் மருத்துவக் கல்லூரியின் மாணவி. இடைநிலைப்பள்ளியில் படிப்பை முடித்துக்கொண்டு, மதத்தின் மீது அக்கறை கொண்டுள்ள அவர், காஷ்கர் இஸ்லாமிய திருமறை பள்ளியில் படிக்கத்துவங்கினார். அவர் கூறியதாவது:

"இப்பள்ளியில் படிக்க நான் விரும்புகின்றேன். சிங்கியாங்கின் சில இடங்களில், இத்தகைய குருமார்கள் மிகவும் குறைவு. பட்டதாரியான பின் மதப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன். இஸ்லாமிய மத குருவாகப் பணி புரிவது நல்லது." என்றார், அவர்.

1  2  3