
புனித நகரான மெக்காவில் புனித யாத்திரை மேற்கொள்வது, ஒவ்வொரு முஸ்லிமும், வாழ்நாளில் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயமாகும். ஆண்டுதோறும், காஷ்கர் நகரின் சில முஸ்லிம்கள் புனித மெக்கா யாத்திரை செய்கின்றனர். தற்போது, சிங்கியாங்கிற்கும் சவூதிஅரேபியாவுக்குமிடையில் நேரடி விமான போக்குவரத்து திறந்து வைக்கப்பட்டுள்ளதால், மெக்கா யாத்திரை மேலும் எளிதாகிவிட்டது. விமானத்தில் மருத்துவ பணியாளர்களும் மொழிபெயர்பாளர்களும் உள்ளனர். கடந்த ஆண்டு காஷ்கர் நகரின் 1500க்கும் அதிகமானோர், மெக்காவில் புனித யாத்திரை மேற்கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள்.
65 வயதான விகுர் இன முதியவர் Akem Mamti அவர்களில் ஒருவர். தமது மெக்கா பயணம் குறித்து அவர் கூறியதாவது:
"புறப்படுவதற்கு முன், அனைத்து உறவினர்களையும் அண்டை அயலாளர்களையும் என் வீட்டிற்கு வரவழைத்து, அனைவரும் மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட்டோம். அவர்கள் என்னை வழியனுப்பி வைத்தனர்."என்றார்.

Akem Mamti நல்குணமுடையவர். துடிப்பானவர். மெக்கா யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், மீண்டும் அனைவரையும் வரவழைத்து ஆனந்தமாகக் கொண்டாடினார். இம்முறை, தமது உற்றார் உறவினர்களுக்கு சவூதிஅரேபியாவில் இருந்து கொண்டு வந்த பேரீச்சம் பழத்தை வழங்கியது மட்டுமின்றி, மெக்காவின் புனித நீரையும் வினியோகித்தார். ஒவ்வொருவரும் கொஞ்சம் குடித்தனர். புனித நீரைக் குடித்த பிறகு அனைவருக்கும் மெக்கா சென்றது போலிருக்கின்றது. இது, பாட்டனார்க்கு நன்றி கூற வேண்டும் என்று கூறி, எல்லாரும் மகிழ்ந்தனர்.
புனித மெக்கா யாத்திரை செய்வதன் நோக்கம் என்ன என்று கேட்டதற்கு அவரது பதில், அனைவரும் எதிர்பார்த்தது அல்ல.
"நான் அயல் மொழியைப் பேச முடியாது என்பது மிக வருத்தம். சவூதிஅரேபிய நாட்டவர்களால் அரபு மொழியை அல்லது ஆங்கில மொழியைப் பேச முடியும். சிலர், உருடு மொழியையும் பேசலாம். ஆனால், எனக்கு விகுர் மொழி மட்டுமே தெரியும். இதனால், மற்றவர்களுடன் கருத்து பரிமாற முடியாமல் இருந்தது. இது, எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடு திரும்பிய பின், இளைஞர்களைச் சந்தித்த போது, கட்டாயம் நன்றாக படிக்க வேண்டும். அதிகமாக அறிவு பெற வேண்டும் என்று நான் கூறுகின்றேன்." என்றார்.
1 2 3
|