• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-04 09:50:55    
காஷ்கர் முஸ்லிம் வாழ்க்கை

cri

புனித மெக்கா யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய பின் அவரைச் சந்தித்த அவரது நெருங்கியவர்கள், "ஹோஜி" என அவரைக் கூப்பிடுக்கின்றனர். இதைக் கேட்டு முதியவர் மனநிறைவு அடைந்தார்.

ஏனெனில், மெக்காவில் புனித யாத்திரை செய்வதற்கு அதிக செலவு ஆகும். காஷ்கர் பிரதேசத்தில் இருந்து புனித மெக்கா யாத்திரை செய்யும் முஸ்லிம்களில் பெரும்பாலானோர், வசதியானவர்கள். 63 வயதான Abdureham அவர்களில் ஒருவர்.

Abdureham காஷ்கர் நகரின் புற்நகரில் உள்ள ஒரு மசூதியின் பொறுப்பாளர். பல்லாண்டுகளுக்கு முன்பு, அவர் மெக்கா சென்றிருந்தார். அவரது வீட்டின் முற்றத்தில் நுழைந்த போது, ஒரு பெரிய தோட்டத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. 600க்கும் அதிகமான சதுர மீட்டர் பரப்புடைய இம்முற்றத்தில், பூச்செடிகள், திராட்சைப்பழ பந்தல், ஆப்ரிகாட் மரம், மாதுளை மரம் ஆகியவை பச்சை பசேல் என்ற காட்சி தருகின்றன. தமது முன்னோடிகள் விட்டுச் சென்ற சொத்து என்றும், தற்போது, குடும்ப வருமானம் பல்வழிகளில் வருகின்றது என்றும் அவர் சொன்னார்.

"மசூதியின் பொறுப்பாளர் என்ற முறையில், நான் திங்கள்தோறும் அரசிடமிருந்து குறிப்பிட்ட தொகை வாழ்க்கை செலவுக்கு பெறுகின்றேன். தவிரவும், காஷ்கர் இஸ்லாமிய திருமறை பள்ளியின் ஆசிரியர் என்பதால், திங்களுக்கு 500 யுவான் ஊதியம் பெறுகின்றேன். என் குடும்பம் நடத்துகின்ற ஹோட்டல் மூலம் மிக முக்கியமான வருமானம் வருகிறது. குறைந்த செலவு, சிறந்த சேவை காரணமாக, ஹேட்டலுக்கு வருவோர் அதிகமாக இருக்கின்றனர். தவிர, எனது மகள்களில் ஒருவர் வியாபாரம் செய்கின்றார். வெளியூரில் வேலை பார்க்கின்றார். அவர்கள் குடும்பத்துக்கு அதிகமான வருமானம் தருகின்றனர்." என்றார், அவர்.

ஒருவருக்கு உதவி தேவை எனக் கேள்விப்பட்டால், சிறிதும் தயக்கமின்றி பணம் கொடுப்பேன். ஏனெனில், மற்றவருக்கு உதவி அளிப்பது, முஸ்லிம்களின் பாரம்பரிய பண்பு என்று அவர் தெரிவித்தார்.


1  2  3