சென் சென், சீனாவின் தென் பகுதியிலுள்ள புதிதாக வளர்ச்சி அடைந்த ஒரு நகரம். கடந்த 25 ஆண்டுகளாக, முன்பு எல்லைப் புற சிறு நகரமாக இருந்த சென் சென், தற்போது நவீன நகரமாக மாறி விட்டது.
சீனாவின் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக இது நிறுவப்பட்டதும் சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணிக்கான சன்னலாகவும் சோதனைக் களமாகவும் சென் சென் திகழ்கிறது. ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்துக்கு அருகில் அமைந்துள்ளதால் அதற்கு புவியியல் அமைப்பு ஆதாயமாக உள்ளது. 1980ஆம் ஆண்டு, நிதிப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க, அந்நிய வணிகர்களை ஈர்த்து, அந்நிய முதலீட்டை பயன்படுத்தி வளர்ச்சி காணப்பட்டது. முன்னேறிய தொழில் நுட்பங்களையும் நிர்வாக அனுபவங்களையும் கொண்டு வந்து பொருளாதார வளர்ச்சியை தூண்டவும், அங்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி, நிலப் பயன்பாட்டிலும், வரி விதிப்பிலும் சலுகை வழங்குவதென சீன அரசு தீர்மானித்தது.
சீன சமூக அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் ஹான் மெங், செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், சன்னல் மற்றும் சோதனை களம் என்ற முறையில், சீனப் பொருளாதார வளர்ச்சிக்காக, சென் சென் நகர் புதிய வழியைக் கண்டறிந்து, பயன்படக் கூடிய அனுபவங்களை வழங்க வேண்டும் என்று கூறினார்.
"சென் சென் தேசியப் பொருளாதாரத்தின் மாற்றத்தில் முன்மாதிரி பங்கு ஆற்றியது என்பது சீனாவுக்கு ஏற்படுத்திய மிகப் பெரிய தாக்கம். உள்நாட்டு பொருளாதாரத்தை வளர்ப்பதிலும் வெளிநாட்டு திறப்பு நெடுநோக்கிலும், குறிப்பாக, சந்தையை நோக்கும் பொருளாதார சீர்த்திருத்தத்தில் புதுமை மாதிரி பங்கு ஆற்றியுள்ளது" என்றார்.
1980ஆம் ஆண்டில் சென் சென் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாறிய பின், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முறைமையை அது முதலில் சீர்படுத்தி, வணிகப் பொருட்களின் விலையை முதலில் திறந்து வைத்து, தேசிய நிலப் பயன்பாட்டு உரிமையை முதலில் ஏல விற்பனை செய்து, பங்கு பத்திரங்களை முதலில் வினியோகித்து, சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்பு முறையை முதலில் நிறுவியது. இந்த "முதலில்", சென் செனின் விரைவான வளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது.
1 2 3
|