கடந்த 25 ஆண்டுகளாக, சென் செனின் வளர்ச்சி, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 3 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய சிறு நகர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து, சுமார் 600 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு உள்ள நவீன நகரமாக அது மாறியுள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆண்டுக்கு சராசரி 28 விழுக்காடு என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது. தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1980ஆம் ஆண்டில் 1000 யுவானுக்கு குறைவாக இருந்து தற்போதைய 60 ஆயிரம் யுவானாக அதிகரித்துள்ளது.
வேலையிலிருந்து ஓய்வெடுத்த கௌ லின், சென் செனில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தார். சென் சென் வளர்ச்சியை நேரில் கண்டுள்ள அவர் செய்தியாளரிடம் கூறியதாவது—
"சிறு நகராக இருந்த சென் சென், தற்போது ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நகராக மாறிவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்த போது, சென் சென் மிகவும் சிறியது. ஒரே ஒரு ரயில் நிலையமும், சில கட்டிடங்களும் பழையவை. தற்போது நகர பகுதி பல மடங்கு விரிவாகியுள்ளது. நவீனமயமாக்கத் திட்டத்தின் படி கட்டியமைக்கப்படுகிறது" என்றார் அவர்.
தற்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. சென் சென் வளர்ச்சியை விரைவுபடுத்தும் சலுகைக் கொள்கையும் அதன் வெற்றிகரமான அனுபவங்களும் சீனாவின் பல்வேறு இடங்களிலும் பரவியுள்ளன. நாடெங்கும் சோஷலிச சந்தைப் பொருளாதாரத்தை சீனா செயல்படுத்தியுள்ளது. அரசு சார் தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீட்டு முறை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பல அந்நிய முதலீட்டு தொழில் நிறுவனங்களும் அரசு சாரா தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட்டுள்ளன. புதிய அமைப்பு முறை மக்களின் ஆர்வத்தையும் புத்தாற்றலையும் உயர்த்தியுள்ளது. தொழில் நிறுவனங்களின் உற்பத்தியால் சந்தையில் வணிகப் பொருட்கள் அதிகரித்துள்ளன.
இன்றைய சென் சென் நகரில், கட்டிடங்கள் நிறைய காணப்படுகின்றன. வண்டிகள் ஓயாது இயங்கிக் கொண்டிருக்கின்றன. கண்ணுக்கு முன் நவீனமயமான நகர காட்சி. ஆனால், சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியின் வளர்ச்சியோடு, சென் சென் சார்ந்த பல சலுகை கொள்கைகளும் வெற்றிகரமான அனுபவங்களும் சீனாவில் பரவியுள்ளன. இந்நிலைமையில், சென் சென் நகரம் முன்னணியில் இருக்குமா?
1 2 3
|