சென் செனின் எதிர்கால வளர்ச்சியை, நிலம், எரியாற்றல், நீர்வளம் உள்ளிட்ட பல காரணிகள் கட்டுப்படுத்துகின்றன. முன்பு போல செறிவான தொழிலாளர்கள் சார்ந்த பதனீட்டுத் தொழிலை மையமாக கொண்டு, சந்தைக்கு ஈடாக தொழில் நுட்பங்களை பெறுவது என்ற பாதையில் முன்னேற்றம் அடையப் போவதில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
சென் சென் புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தின் நிர்வாக கமிட்டியின் துணைத் தலைவர் லின் போ கூறியதாவது—
"தொழிலை மையமாக கொள்வதிலிருந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மையமாக கொள்வதை நோக்கி வளர வேண்டும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அரசு சலுகை வழங்க வேண்டும். அண்மையில், நாடளவில் 78 தேசிய அளவிலான முக்கிய ஆய்வகங்களுடன் நாங்கள் ஒத்துழைத்து, பொது ஆய்வுக் கூடம் நிறுவியுள்ளோம். எங்கள் மண்டலத்திலுள்ள பரந்துபட்ட நடுத் தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அது பொது மூலவளத்தை வழங்கலாம். தவிர, புத்தாக்கத்திலும் தொழில் நடத்துவதிலும் ஏற்படும் செலவைக் குறைக்க, தொழில் நிறுவனங்களுக்கு பணம் திரட்டல், நிர்வாகம், உற்பத்திப் பொருள் விற்பனை உள்ளிட்ட சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்" என்றார் அவர்.
சில ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், சென் செனின் புதிய உயர் தொழில் நுட்ப தொழில், ஓரளவுக்கு வளர்ந்துள்ளது. நடமாடும் தொலைத் தொடர்பு, கணினி, மென் பொருள், உயிரி மருந்து உள்ளிட்ட தொழில் குழுமங்கள் உருவாகியுள்ளன. 100 கோடி யுவானுக்கும் 1000 கோடி யுவானுக்கும் மேற்பட்ட உற்பத்தி மதிப்பு உள்ள பெரிய மற்றும் நடுத் தர புதிய உயர் தொழில் நுட்ப தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக தோன்றுகின்றன. கடந்த ஆண்டு, சென் சென் புதிய உயர் தொழில் நுட்ப தொழிலின் உற்பத்தி மதிப்பு 30 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது. முழு நகரின் மொத்த தொழில் உற்பத்தியில் இது 50 விழுக்காட்டுக்கு மேலாக இருக்கிறது. வளர்ச்சி போக்கின் நோக்கில் பார்த்தால், தற்போதைய சென் சென், மறுபடியும் சீனாவின் முன்னணியில் உள்ளது. 1 2 3
|