சீனா மே திங்கள் 24ம் நாள் "அன்பு நிறைந்த உதவி" என்னும் நடவடிக்கையைத் துவக்கியுள்ளது. இதன் மூலம் சமூகத்தின் பல்வேறு சக்திகளை அணிதிரட்டி நிதி உதவி வழங்கி நீர் தேக்கங்களைக் கட்டி சீனாவின் மேற்கு பகுதியில் நீர் பற்றாகுறையால் அல்லல்படும் ஏழைப் பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் வாழ்க்கை சூழலை மேம்படுத்துவதற்கும் உதவி வழங்கப்படும். இந்த நடவடிக்கை 2000ம் ஆண்டில் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட "தாய் நீர் குளம் "எனும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையாகும்.
இயற்கை மற்றும் வரலாற்றின் காரணமாக சீனாவின் மேற்கு பகுதியின் சில இடங்களில் நீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. அங்கே சராசரியாக ஒரு நபருக்கு பயன்படுத்தக் கூடிய நீர் 110 கன மீட்டர் மட்டுமே கிடைக்கின்றது. இது உலகின் சராசரி நீர் அளவில் 3.7 விழுக்காடாகும். அங்கே மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவைப்படும் நீர் மழை நீர் சேமிர்ரின் மூலம் கிடைக்கின்றன. கடுமையான நீர்ப் பற்றாக்குறையினால் அங்கு விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானக உள்ளது. இயல்பான சூழ்நிலையில் வாழ்கின்ற பெண்களை விட அங்குள்ள பெண்கள் பல மடங்கு கடினத்தை சுமக்க வேண்டியுள்ளது.
1 2 3
|