• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-10 16:44:38    
ஏழை மகளிருக்கு உதவும் சீன அரசு

cri

சீன மகளிர் வளர்ச்சி நிதி சங்கம் நிறைவேற்றிய "தாய் நீர் குளம் "எனும் திட்டத்தின் கீழ் சமூகத்தில் நிதி திரட்டி பெண்களின் வசிக்காக சிமென்ட்டினால் குளம் கட்டப்பட்டது. இந்தக் குளம் பயன் தரும் முறையில் வெளியேறும் மழை நீரை சேமித்து குடி நீர் பிரச்சினையைத் தீர்த்தது.

கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைபடுத்தப்பட்ட "தாய் நீர் குளம்"எனும் திட்டம் மகிழ்ச்சிகரமான பயனளித்துள்ளது. வென்சியோயுன் என்பவர் சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள சுச்சான் மாநிலத்தின் வறண்ட மலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண் "தாய் நீர் குளம்"திட்டம் அவருடைய ஊரில் ஏற்படுத்திய மாற்றம் பற்றி கூறினார்

தற்போது என் ஊரில் ஒவ்வொரு குடும்பத்தினரும் குழாய் தண்ணீர் குடிக்கின்றனர். குழந்தைகளும் முதியோரும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். முன்பு பன்றிகளை அதிகமாக வளர்க்க வில்லை. காரணம் தண்ணீர் பற்றாகுறைதான். இப்போது ஒவ்வொரு குடும்பத்திலும் 2, 3 பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாண்டு எங்கள் குடும்பத்தின் வருமானம் 300 முதல் 400 யுவான் வரை அதிகரிக்கலாம் என்றார் அவர்.

"தாய் நீர் குளம் "எனும் திட்டத்தின் 25 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டு 90 ஆயிரம் குளங்கள் கட்டப்பட்டன. 1100க்கும் அதிகமான இடங்களில் நீர் விநியோகிக்கும் திட்டப் பணி நிறைவேற்றப்பட்டது. சுமார் 10 லட்சம் மக்கள் இதனால் நன்மை பெற்றுள்ளனர். 22 மாநிலங்கள் மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் இந்த திட்டப் பணி மூலம் உதவி பெற்றுள்ளன. "தாய் நீர் குளம் " கட்டுமானத்தால் பயனடையும் பகுதிகளில் வாழ்கின்ற பெண்களின் ஆரோக்கியம் சீரடைந்துள்ளது. அவர்களுடைய வாழ்க்கை சூழலும் மேம்பட்டுள்ளது.


1  2  3