• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-10 16:44:38    
ஏழை மகளிருக்கு உதவும் சீன அரசு

cri
"தாய் நீர் குளம் "எனும் திட்டம் பல மக்களுக்கு நன்மை தந்துள்ள போதிலும் சீனாவின் மேற்கு பகுதியில் இன்னும் சில இடங்களில் குடி நீர் பற்றாக்குறை நிலவுகின்றது. "அன்பு நிறைந்த உதவி"திட்டம் நீர் பற்றாக்குறைக்கு ஆளாக்கப்பட்ட மேலும் கூடுதலான பெண்கள் மற்றும் குடும்பங்கள் உற்பத்தித்திறன்னையும், வாழ்க்கை சூழலையும் மேம்படுத்தும் இன்னொரு முக்கிய நடவடிக்கையாகும். சீன மகளிர் வளர்ச்சி நிதியத்தின் துணை தலைமை செயலாளர் சிங்கோயிங் அம்மையார் இந்த திட்டம் பற்றி கூறுகின்றார்

எங்கள் செயல் முன்பு போலவே தொடர்கின்றது. அதாவது 1000 யுவான் உதவியுடன் நீர் குளத்தை கட்டுகிறோம். இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவைபடும் குடி நீர் பிரச்சினை தீர்க்கப்படும். எங்கள் நாட்டின் நிலைமையை பார்த்தால் குடி நீர் பிரச்சினை பல இடங்களில் நிலவுகின்றது. ஆகவே நாங்கள் நடைமுறைப்படுத்தும் இந்த முயற்சி அடுத்த சில ஆண்டுகளும் தொடரும் என்றார் அவர்.

"தாய் நீர் குளம்"திட்டத்தின் அடிப்படையில் "அன்பு நிறைந்த உதவி"திட்டம் மூலம் மரம் நடுவது, கால்நடை வளர்ப்பு, உற்பத்தியை விரிவாக்குவது ஆகியவற்றில் சீனாவின் மேற்கு பகுதியில் வாழ்கின்ற ஏழைப் பெண்களுக்கு உதவி வழங்கப்படும். இந்த நடவடிக்கை சமூகத்தின் அக்கறையை பரந்தளவில் ஈர்த்துள்ளது. நடவடிக்கை அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் சீன தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி யுவான் நந்கொடை வழங்கின. பல திரைப்பட நடிகர்களும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளனர். வறிய பிரதேசங்களில் வாழ்கின்ற பெண்களும் அவர்களின் குடும்பங்களும் சமூகத்தின் உதவியுடன் விரைவில் வறுமையிலிருந்து விடுபடுவர் என்று நாங்கள் நம்புகிறோம்.


1  2  3