• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-15 08:47:26    
குளிர் காலத்தில் தோல் பாதிப்பு

cri
தோலில் கரக்கின்ற திரவங்களால் தோல் மென்மையாகவும் ஈரப்பசையுடனும் இருக்கின்றது. ஆனால் குளிர் காலத்தில் ஈரப்பசை குறைவதாலும் உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களாலும் தோல் வறண்டுவிடுகிறது. சிலருக்கு வறட்சி அதிகமாகி தோல் சொர சொரவென இருக்கும்.

கால் பாதங்களில் வறட்சியால் வெடிப்பும் வெடிப்புக்குள் தண்ணீரும் மண்ணும் சேர்ந்து விட்டால் கிருமிகளின் பாதிப்பும் ஏற்பட்டு புண் ஏற்படும். உதடுகளில் வெடிப்பும் புண்ணும் உண்டாகும். முகங்களிலும் தோல் வறட்சியாகி மென்மையான தோல்மாறி கடினமான தோலாகிவிடும். இது பெண்களுக்கு அழகு பிரச்சினையும் கூட.

இதற்கு என்ன செய்யலாம்?

தோல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி தண்ணீரில் உடலை கழுவக் கூடாது. அப்படிக் கழுவும் போது ஏற்கெனவே குறைந்துள்ள ஈரப்பசை மேலும் குறைந்து விடும். மேலும் சோப்பு போட்டு குளித்தால் இன்னும் அதிகமாகவே வறட்சியாகிவிடும். அதனால் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம்.

மிதமான வெந்நீரில் குளிப்பது வறட்சியான தோலுக்கு இதமானது. இயல்பாகவே வறண்ட தோலுள்ளவர்கள் மற்றும் குளிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டவர்கள் குளிர் கிரீம்களை உபயோகிக்கலாம். பாரபின் எண்ணெய் வாசலைன் போன்ற தைலங்களும் பயனளிக்கும்.

கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாட்டிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். மாலையில் குறிப்பாக குளிர்ச்சியான நேரத்தில் காலுறைகளை தவறாது இரவு முழுவதும் அணிந்தால் கால் வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும்.

உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம். தேவைப்படுவோருக்கு ஏ வைட்டமின் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும்.

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040