• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-15 08:47:26    
குளிர் காலத்தில் தோல் பாதிப்பு

cri

புகை பிடித்தால்.....

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்பது இலட்சம் மக்கள் புகையிலை உபயோகிப்பதால் இறக்கின்றார்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிவிடும்.

சிகரெட், பீடி புகைத்தல் போன்ற பல்வேறு முறைகளில் புகையிலை உபயோகிக்கப்படுகின்றன. புகையிலையில் 4000த்திற்கு மேற்பட்ட கெடுதலான இரசாயன நச்சுப் பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு, தார் போன்றவை மிகவும் கெடுதலானவை.

புகையிலையை உபயோகிப்பதால் ஏற்படுகின்ற உடல் நலக் கேடுகள்.....

எண்ணற்ற நோய்களும் மரணமும் புகையிலையால் உண்டாகின்றன. புகையிலையானது உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் பாதிக்கும். புகையிலையால் கீழ்கண்ட உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுகின்றது. வாய், தொண்டை, நுரையீரல், மூச்சுக்குழாய் மற்றும் உணவுப் பாதை, புகையிலையால் மாரடைப்பு ஏற்படுகின்றது. புகையிலையால் பிராங்கைடிஸ் போன்ற இருமல் நோய் ஏற்படுகின்றது. புகையிலையால் ஆண்களுக்கு ஆண்மை இழப்பும் பெண்களுக்கு மலட்டுத் தன்மையும் ஏற்படுகின்றது. புகையிலை பிடிப்பதால் குறைப் பிரசவம் மற்றும் எடைக் குறைவான குழந்தைகள் பிறக்கின்றன.


1  2  3