• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-15 08:47:26    
குளிர் காலத்தில் தோல் பாதிப்பு

cri

 

வலிப்பு

நமது மூளையின் நரம்பு செல்களிலிருந்து வெளிப்படுகின்ற மின்சார சக்தியால் தான் நம்முடலின் ஒவ்வொரு பாகமும் அசைகின்றது. ஆனால் அதுவே அசாதாரணமான அளவில் வெளிப்பட்டால் அளவுக்கு மீறிய கட்டுப்பாடில்லாத அசைவுகள் உடலெங்கும் ஏற்படுகின்றன. அதனால் வலிப்பு உண்டாகின்றது.

இதற்கு குறிப்பிட்ட காரணம் என்னவென்று பொரும்பாலோருக்கு சொல்ல முடிவதில்லை. அதனால் அதை காரணமில்லாத வலிப்பு என்பர். சிலருக்கு மூளையில் கட்டியோ அல்லது அடிப்பட்டாலோ அதனால் வலிப்பு ஏற்படும். சிலருக்கு கை கால்கள் இழுக்காமல் சுயநினைவு மட்டும் தப்பிவிடும்.

சிலருக்கு திடீரென கோபம், ஆவேசம் அல்லது பயம், அழுகை அல்லது கலகல என்ற சிரிப்பு என்பது போன்ற அறிகுறிகள் ஒரு சில மணித் துளிகளுக்குத் தோன்றி பின்னர் மறைந்து விடும். சிலருக்கு தொலைக்காட்சியைப் பார்த்தால் வலிப்பு ஏற்படும். வெகு சிலருக்கு குளித்தால் வலிப்பு ஏற்படும். ஏதாவது காரணத்தின் அடிப்படையில் இது வந்தால் அதை சரி செய்தால் குணமாகிவிடும்.

காரணமே இல்லாமல் ஏற்படுகின்ற வலிப்பிற்கு முறையாக சிகிச்சை அளித்தால் குணமடையும். இங்கு முக்கியமாக இரண்டு காரணங்கள். வலிப்பு வருகின்றவர்கள் எந்த வாகனங்களையும் ஒட்டக் கூடாது. முற்றிலும் குணமான பின்னர் ஓட்டலாம். அடிக்கடி வலிப்பு ஏற்படுவோர் தனிமையிலிருக்கும் போது நெருப்பின் அருகில் வேலை செய்யக் கூடாது.

வலிப்பின் போது சாவிக் கொத்தையோ இரும்புக் கம்பியையோ கொடுத்தால் சரியாகிவிடும் எனற நம்பிக்கை நம்மிடையே உண்டு. எதையும் கொடுக்காவிட்டாலும் தானாக வலிப்பு நின்று விடும். அச்சமயத்தில் வாந்தி எடுத்தால் தலையை ஒரு புறமாக சாய்த்து வைத்து வாந்தியாக வரும் பொருள்கள் மூச்சுப் பாதையை அடைக்கமால் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். கை கால்கள் இழுக்கும் போது எதிலாவது வேகமாக மோதினால் எலும்பு உடைந்து விடும். அதனால் எதிலும்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

1  2  3