கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் தைவான் மாநிலத்துக்கும் பெருநிலப் பகுதிக்குமிடையே பொருளாதார வர்த்தக தொடர்பு நாளுக்கு நாள் நெருங்கி வருகின்றது. மேலும் அதிக தைவான் முதலீட்டு தொழில் நிறுவனங்கள் பெருநிலப்பகுதியில் தொடங்கப்பட்டு வளர்ச்சியுற்று வருகின்றன. இதற்கிடையில், பெருநிலப்பகுதி சந்தையில் விற்பனைக்கு வரும் தைவான் பொருட்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சீனாவின் பூஃசியென் மாநிலத்தில் அமைந்துள்ள சியா மன் நகரம், கடலுக்கு அப்பால் உள்ள தைவானுக்கு நேராக உள்ளது. புவியியல் அமைப்பு சாதகமாக இருப்பதால் இந்நகர், இரு கரை பொருளாதார வர்த்தக தொடர்பில் முக்கிய பங்காற்றி வருகின்றது.
சியா மன் நகர், சீனாவில் மிகவும் முன்னதாக நிறுவப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஒன்றாகும். இந்நகரின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1500 சதுர கிலோமீட்டர். இது, தைவானின் ஜின் மன் நகருக்கு நேராக இக்கரையில் அமைந்துள்ளது. இவற்றுக்கிடையில் இடைவெளி சில கிலோமீட்டர் மட்டுமே. சிறந்த புவியியல் அமைப்பினால், தைவானுடன் பொருளாதார வர்த்தக உறவை வளர்க்கும் வாய்ப்பு சியா மன் நகருக்கு உண்டு. 1997ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்களில், இரு கரைகளுக்கிடையே சோதனை அடிப்படையில் நேரடி சரக்கு விமான போக்குவரத்து திறந்து விடப்பட்டது. 2001ஆம் ஆண்டின் ஜனவரி திங்கள், சியா மன் நகரிலிருந்து, தைவானின் ஜின் மன் நகருக்கு செல்லும் பயணி விமானப் போக்குவரத்தும் துவங்கியது. இதனால், சியா மன் நகர், இரு கரை தொடர்பின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இவ்வாண்டின் முற்பாதியில் மட்டும், இந்த விமான வழித்தடத்தில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டி விட்டது என்று புள்ளி விவரம் கூறுகிறது. சியா மன் துறைமுக விவகார அலுவலகத்தின் தலைவர் Zhou Qing Hai பேசுகையில், சியா மன்-ஜின் மன் விமான வழித்தடம் திறந்து விடப்பட்டது, இரு கரைகளுக்கிடையிலான பயணி விமானப் போக்குவரத்திற்கு பெரும் பயனளித்துள்ளது. இரு கரை வணிகர்கள், குறிப்பாக பெருநிலப்பகுதியில் முதலீடு செய்யும் தைவான் வணிகர்கள் இதை வரவேற்கின்றனர்.
1 2 3
|