சிறந்த புவியியல் அமைப்பு காரணமாக, பெருநிலப்பகுதியில் முதலீடு செய்யும் தைவான் வணிகர்கள் சியா மன் நகரை, முதலில் விரும்புகின்றனர். கடந்த ஜூலை திங்கள் வரை, இந்நகரில், தைவான் முதலீட்டுத் திட்டப்பணிகளின் மொத்த எண்ணிக்கை 2300ஐத் தாண்டியுள்ளது. உண்மையில் பயன்படுத்தப்படும் தைவான் முதலீட்டுத் தொகை 280 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. பல தைவான் முதலீட்டு நிறுவனங்களில், சியா மன்னிலான தைவான் வேளாண் நிறுவனங்களின் வளர்ச்சி, முன்மாதிரியாக விளங்குகின்றது. வானிலையும், மண் வளமும், சியா மன் தைவான் இரண்டிலும் ஒரேமாதிரி உள்ளன. வேளாண் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்வதற்கு இது மிகவும் ஏற்றது. தவிர, பல சலுகைகளை சியா மன் நகர் வழங்கி, தைவான் முதலீட்டு வேளாண் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சிறந்த சூழலை உருவாக்கியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கான வரி குறைப்பும் வரி விலக்கலும் இதில் அடங்கும்.
1980ஆம் ஆண்டுகளின் இறுதியில், சியா மன் நகரில் நடத்தப்பட்ட சின் ஸுன் (Xin Chun) உணவுப் பொருள் நிறுவனம், உணவுப் பொருட்களின் பதனீடுக்கும் குளிர்விப்புக்கும் சிறப்பாக பொறுப்பேற்கின்றது. தற்போது, இதில் சுமார் 700 பணியாளர்கள் இருக்கின்றனர். ஆண்டு உற்பத்தி ஒரு கோடியே 20 லட்சம் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இந்நிறுவனத்தின் துணை மேலாளர் Lin Fu Fan கூறியதாவது:
"கெள சியுங் நகரில் நான் வாழ்கின்றேன். அங்குள்ள வானிலை, இங்கு போலவே உள்ளது. இந்த வானிலையில் வேளாண் பொருட்கள் நன்கு விளைகின்றன. இது மட்டுமல்ல, இங்குள்ள முதலீட்டுச் சூழல் சிறந்தது. சியா மன் நகரில் மட்டும், 20 ஆயிரத்துக்கு அதிகமான தைவான் வணிகர்கள் இருக்கின்றனர்." என்றார்.
சியா மன்னும், தைவானுக்கு அருகில் அமைந்துள்ளது. பண்பாட்டிலும், மொழியிலும் வித்தியாசம் இல்லை. பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வகை இரு கரை ஒத்துழைப்பை வளர்ப்பதில் இன்றியமையாத வசதிகள் சியா மன்னுக்கு உண்டு. சியா மன் நகரின் துணை தலைவர் Huang Ling அம்மையார் செய்தியாளருக்குப் பேட்டி அளிக்கையில், சியா மன்னுக்கும் தைவானுக்குமிடையே நாளுக்கு நாள் வளர்ந்து வரும் பொருளாதார வர்த்தக தொடர்பு, இரு கரை மக்களுக்கு நன்மை பயக்கும். இனிமேல், இரு கரை தொடர்பின் வளர்ச்சிக்காக சியா மன் நகர் தொடர்ந்து பாடுபடும் என்றார். அவர் கூறியதாவது:
"சியா மன்னுக்கும் தைவானுக்குமிடையே சிறப்பு உணர்வு உண்டு. இரு கரை தொடர்பைப் பொறுத்த வரை, சியா மன், மேம்பாடுடைய இடமாகும். இத்துறையிலான தொடர்பை விரிவாக்குவதற்கு பொறுப்பேற்கின்றோம்." என்று அவர் தெரிவித்தார். 1 2 3
|