போக்குவரத்து மேம்பாட்டினால், முதலில், சியா மன்னுக்கும் தைவானுக்குமிடையிலான வர்த்தக அளவு அதிகரிக்கிறது. சியா மன்னிலிருந்து தைவானுக்கு ஏற்றிச்செல்லும் பொருட்களில், சீன மூலிகை மருந்துகள், உணவுப் பொருட்கள், அன்றாடத் தேவைப் பொருட்கள் ஆகியவை அடங்கும். தைவானிலிருந்து, சியா மன்னுக்கு ஏற்றிச்செல்லும் பொருட்களில், பெரும்பாலானவை தைவானின் தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண் பொருட்களாகும். இரு கரை வர்த்தக வளர்ச்சியை விரைவுபடுத்த, சியா மன்னின் Da Deng Daoவில் சிறிய அளவிலான விற்பனை சந்தையை பெருநிலப்பகுதி நிறுவியுள்ளது. தற்போது, இச்சந்தையின் ஆண்டு விற்பனை 20 கோடி யுவானை எட்டியுள்ளது.
அண்மையில், 15 வகை தைவான் பழங்கள், சுங்க வரியின்றி பெருநிலப்பகுதி சந்தையில் நுழைய அனுமதிக்கப்பட்டது. இவற்றில் பல தைவானின் தனித்தன்மை வாய்ந்த பழங்களாகும். சியா மன் நகர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தைவான் பழங்கள் மீதான பரிசோதனைக் கட்டுப்பாடுகளை குறைத்து, சியா மன் மொத்த விற்பனை பழச் சந்தையில் தைவான் பழப் பிரிவை திறந்து விட்டது. தைவான் பழ வகைகள், சியா மன் வழியாக பெருநிலப்பகுதி சந்தையில் நுழைவதற்கு இந்த நடவடிக்கைகள் வசதி வழங்கியுள்ளன. சியா மன் நகரின் வர்த்தக வளர்ச்சி அலுவலகத் துணைத் தலைவர் Dai Bi Zhong பேசுகையில், தைவான் பழ வகைகள் பெருநிலப்பகுதியில் நுழையும் பரிமாற்ற தளமாக சியா மன் வளர்ந்துள்ளது என்றார். அவர் கூறியதாவது:
"மே திங்கள் 28ஆம் நாள் முதல், சியா மன்னிலுள்ள 6 வர்த்தக நிறுவனங்கள் 17 முறையாக தைவான் பழங்களை இறக்குமதி செய்துள்ளன. இதன் மொத்த எடை 86 டன். சரக்கு மதிப்பு 84 ஆயிரம் அமெரிக்க டாலராகும். சிறிதளவு பழங்கள் உள்ளூர் பிரதேசத்தில் விற்கப்பட்டுள்ளன. தவிர பெரும்பங்கு பழங்கள் பெய்ஜிங், ஷாங்காய், மற்றும் சியா மன்னின் சுற்றுப்புறப்பிரதேசங்களிலும் விற்பனை செய்யப்பட்டன." என்றார் அவர்.
1 2 3
|