 நண்பர்களே, வடமேற்கு சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் நிலநடுக்கம் அடிக்கடி நிகழ்கின்றது. 2003ஆம் ஆண்டில் மட்டும், ரிச்டர் அளவுகோலில் 4ஆகப் பதிவான நிலநடுக்கம் 61 தடவையும், 6க்கு மேற்பட்ட அளவுடைய நிலநடுக்கம் 2 தடவையும் நிகழ்ந்தன. இவற்றில் கடந்தப் பிபரவரி திங்கள், தெற்கு காஷ் பிரதேசத்தில் நிகழ்ந்த 6.8 ரிச்டர் அளவுடைய கடுமையான நிலநடுக்கத்தில், பல வீடுகள் இடிந்துவிட்டன. உயிரிழப்பும் உடைமை இழப்பும் நிறைய ஏற்பட்டன. நிலநடுக்கத்தினால் ஏற்படும் இழப்பை குறைத்து, உள்ளூர் மக்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு துவக்கம் முதல், சின்ச்சியாங்கில் நிலநடுக்கத்தை தாக்குப் பிடிக்கும் குடியிருப்பு கட்டும் பணிதுவக்கப்பட்டது. இன்றைய சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட காஷ் பிரதேசத்தின் சியாஷ் மாவட்டத்தில் இந்த திட்டப்பணியின் நடைமுறையாக்கம் பற்றி எடுத்து கூறுகின்றோம்.
செப்டெம்பர் திங்கள் இலையுதிர்காலத்தின் துவக்கமாகும். சின்ச்சியாங்கில் அமோக அறுவடையை மக்கள் ஆடல் பாடலுடன் கொண்டாடுகின்றனர். அதிக தானிய விளைச்சல் பெற்ற சியாஷ் மாவட்ட அதிலா ஊரின் யக்குபு ழெசிதி தனது புதிய வீட்டுக்கு தட்டுமுட்டு சாமான்களை வாங்க திட்டமிட்டார். அவர் மகிழ்ச்சியுடன் கூறியதாவது,
1 2 3
|