
தற்போது, யக்குபு வசிக்கும் அதிலா ஊரில் மண்ணினால் கட்டப்பட்ட வீடுகள் எதுவுமே இல்லை. கிராம வாசிகள் எல்லோரும் நிலநடுக்கத்தைத் தாங்கும் உறுதியான வீட்டுக்கு குடியேறினர். ஊரின் தலைவர் அபுது கிலிமு தூர்பு கூறியதாவது
எமது வசிப்பிடத்தில் நிலநடுக்கம் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. பெரிய நிலநடுக்கத்தை அடுத்து, பின் அதிர்வுகள் அதிகம். விவசாயிகளின் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நடுவண் அரசும் தன்னாட்சி அரசும் பல்வேறு சமூக வட்டாரங்களும் அளித்த நிதி உதவியுடன், எமது விவசாயிகள் தற்போது நிலநடுக்கத்தைத் தாங்கும் வீடுகளில் வசிக்க முடிகின்றது. வசிப்பிடம் பற்றிக் கவலை இல்லாத நிலையில், அவர்கள் வயல் வேளையில் ஈடுபட்டு, அதிக விளைச்சல் காண முடிகின்றது என்றார் அவர். 1 2 3
|