• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-16 08:47:08    
நிலநடுக்கத்தை தாக்குப் பிடிக்கும் குடியிருப்பு

cri

அரசு எங்களுக்காக இந்த புதிய வீட்டை கட்டித் தந்துள்ளது. சொந்தச் செலவு எதுவும் இல்லை. இதைக் கட்டுவதில் நான் கலந்து கொள்ளவில்லை. எனது குடும்பத்தில் 3 பேர் உள்ளனர். முன்பு ஒரு சிறிய வீடு இருந்தது. தற்போது, இந்தப் புதிய வீட்டின் பரப்பு 50 சதுர மீட்டராகும். 3 பேருக்கு மிகவும் தாராளமாக இருக்கின்றது என்றார் அவர்.

யக்குபு வயது 38. தனது புதிய வீடு, சின்ச்சியாங்கில் நிலநடுக்கத்தைத் தாங்கும் தடுப்பு குடியிருப்பு திட்டப்பணியில் சேர்ந்தது என்று அவர் சொன்னார். புதிய வீட்டில் கவலை இல்லாமல் நன்றாகத் தூங்கலாம் என்பது தான் மிகவும் முக்கிய விஷயம் என்று அவர் உணர்ச்சி வசப்பட்டுக் குறிப்பிட்டார். புதிய வீடு நிலநடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கக் கூடியது. முன்பு போல் நாள்தோறும் நிலநடுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. முந்திய வீடு மண்ணினால் கட்டப்பட்டது. உறுதியாக இல்லை. ஆகையால் ஆண்டுதோறும் சில நூறு யுவானை செலவிட்டு செப்பனிட வேண்டியிருந்தது. அதிக வருமானம் இல்லாத யக்குபு குடும்பத்திற்கு இது ஒரு கடுமையான சுமையாகும். இப்படிப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய நிலநடுக்கத்தினால், யக்குபுவின் வீடு இடந்தது. தற்போது புதிய வீட்டில், யக்குபு மிகவும் மகிழ்ச்சியுடன் வசிக்கின்றார். வயலில் வேலை செய்வது தவிர, பிறருக்கு நிலநடுக்கத்தை தாங்கும் வீட்டைக் கட்டுவதிலும் இவர் பங்கெடுத்தினால், இவ்வாண்டின் வருமானம் கடந்த ஆண்டு இருந்ததை விட 2000 யுவான் அதிகரிக்கும் என்று யக்குபு கூறினார்.

1  2  3