• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-07 11:17:36    
சீனாவில் மணமக்கள் தொடர்பு மையம்

cri
தற்போது பெரும்பாலான இந்தியர்களின் திருமணம் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. சீனாவில் இளைஞர்களே தங்களது வாழ்க்கை துணையைத் முறை அதிகம். இந்தியாவில் இருப்பது போல், ஒரு சில இளைஞர்கள் பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்டவருடன் பழகி திருமணம் செய்கின்றனர். பெரும்பாலோர் படிக்கும் போதும், வேலை செய்யும் இடத்திலும் மற்றும் நண்பர்கள் மூலமும் சந்தித்தவர்களிலிருந்து தங்களது மனதுக்கு விருப்பமானவரைத் தேர்ந்தெடுத்து காதலித்து திருமணம் செய்கின்றனர். இது மட்டுமல்ல, சில வயதானவர்களும், விவாகரத்து செய்தவர்களும் கூட மணமக்கள் தொடர்பு மையங்களின் மூலம் தங்களது துணையைக் கண்டறிகின்றனர்.

Zi Jin Cheng எனப்படும் மணமக்களுக்கான சேவை மையம், பெய்ஜிங்கில் உள்ள மிக பெரிய மணமக்கள் தொடர்பு மையமாகும். ரேன் தியேன் என்பவர் இதன் தலைவர். பல்வேறு பகுதிகளில் உள்ள இத்தகைய மையங்களை ஒன்றிணைத்து மணமக்கள் தொடர்பு சங்கத்தை உருவாக்குவதில் இவர் ஈடுபட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன? இது பற்றி பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் மணமக்கள் தொடர்பு சந்தை விரிவாகி வருவதால், நாடு தழுவிய முறைப்படியான மணமக்களுக்கான சேவை மையம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தாமும் தமது சக பணியாளர்களும் கருதியதாகத் தெரிவித்தார்.

மணமக்களுக்கான Zi Jin Cheng சேவை மையம் பெய்ஜிங்கில் புகழ் பெற்றுள்ளது. எமது தரமான சேவையின் மூலமும், இணையமயமாக்க நிர்வாகம் மூலமும், மணமக்கள் தொடர்பு சந்தையை வளர்த்து, மேலும் அதிக மக்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகளை வழங்க விரும்புகின்றோம். இந்த சந்தை மிகவும் பெரியது என்றார் அவர்.

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040