
இத்தகைய மணமக்கள் தொடர்பு மையங்கள் பெரும்பாலும் நகரங்களிலேயே உள்ளன. பெய்ஜிங் மாநகரில் மட்டும், 35 முதல் 50 வயதான திருமணமாதாத மக்களின் எண்ணிக்கை 5 இலட்சமாகும். முதலில் அவர்கள் தங்களது அடையான அட்டையை காட்டி, மையத்தில் பதிவு செய்ய வேண்டும். பிறகு, அவர்களின் கோரிக்கையின் படி, மணமக்கள் தொடர்பு மையம், தன்னிடம் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் பட்டியலில் இருந்து பொருத்தமானவர்களை அறிமுகப்படுத்துகின்றது. Zi Jincheng போன்ற பெரிய மணமக்கள் தொடர்பு மையங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.
வெவ்வேறு வகையான மக்களுக்கு சில மணமக்கள் தொடர்பு மையங்கள் சிறப்புச் சேவை புரிகின்றன. ஹோ நான் மாநிலத்து சேன் சௌ நகரில் அறிவு ஜீவி மக்களுக்கான மணமக்கள் சேவை மையம் உள்ளது. இம்மையத்தின் தலைவர் லீ சியேன் கூறியதாவது,
எமக்கு ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் உண்டு. அதாவது அறிவு ஜீவி மக்களுக்கு சேவை புரிவதாகும். சமூகத்தில் இத்தகைய தேவை அதிகமானது. காரணம், தற்போது, திருமணமாகாத பல அறிஞர்கள் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதால், அவர்களுக்கு காதலிகளைத் தேடும் நேரம் குறைவு. சிலர் 30 வயதான பின்னர் திருமணம் செய்ய முடியவில்லை. ஆகையால், சிறப்பு பணியாளர்கள் அவர்களுக்கு சேவை புரிய வேண்டும் என்றார் அவர். 1 2 3
|