
இந்தியாவைப் போல், நடுவில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தும் ஒரு முறை சீனாவிலும் பலகாலமாக இருந்து வருகின்றது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், பெய்ஜிங் மகளிர் சம்மேளனம் சீனாவில் முதலாவது மணமக்கள் தொடர்பு மையத்தை உருவாக்கியது. அப்போது, சரியான பணியகமும், சிறப்பு பணியாளர்களும் இல்லை. மகளிர் சம்மேளனத்தின் பணியாளர்கள் வயதுக்கு வந்த இளைஞ்ர்களை ஒரு பூங்காவுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பை அளித்தனர்.
படிப்படியாக, மணமக்கள் தொடர்பு மையத்தில் தனது தகவல்களை பதிவு செய்து காதலிகளைத் தேடுபவரின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. இத்தகைய மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. தற்போது, சீனாவில் பதிவு செய்து அதிகாரப்பூர்வமாக இயங்கும் மணமக்கள் தொடர்பு மையங்களின் எண்ணிக்கை 5000ஐத் தாண்டியுள்ளது. மணமக்களை அறிமுகப்படுத்தும் சேவையை தவிர, காதல், திருமணம் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் இந்த மையங்கள் ஆலோசனைச் சேவை வழங்குகின்றன.
1 2 3
|