• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Apr 8th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-23 11:41:32    
சீனாவில் இந்திய நாட்டிய நாடகம்

cri

யாங் சி மின் என்பவர் இந்த இந்திய நாட்டிய நாடகத்தை சீனாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். கடந்த பல ஆண்டுகளாக, இந்திய பண்பாட்டையும் கலைகளையும் சீன மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் அவர் ஈடுபட்டு வருகின்றார். இந்தியாவில் புகழ்பெற்ற தங்க மயில் விருதுபெற்ற Lahgan, Devdas என்னும் பிரபல இந்தித் திரைப்படங்களின் சில பகுதிகளும், 6 பழஞ்சிறப்புமிக்க நடன வகைகளும் இந்த நாட்டிய நாடகத்தில் இடம்பெறுகின்றன. சீனாவின் மத்திய பாலே நடனக் குழு இதற்கு நடன ஆதரவு அளிக்கின்றது. இந்த நாட்டிய நாடகம் மூலம், ரசிகர்கள் அழகான, மேம்பட்ட இந்திய நடனக்கலை பற்றியும், இந்திய திரைப்படத்தின் சிறப்புமிக்க கதைகள் பற்றியும் இந்திய பண்பாட்டின் ஈர்ப்பு பற்றியும் அறியலாம். யாங் சி மின் இந்த நாட்டிய நாடகத்தின் வடிவமைப்பாளர். அவர் கூறியதாவது,

சீன பண்பாடு பற்றி இந்திய மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்திய பண்பாடு பற்றியும் சீன மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய எளிதான நடன நிகழ்ச்சிகள் மூலம், மேலும் அதிகமான சீன மக்கள் இந்தியக் கலை பற்றி அறிந்து கொள்ளலாம். இந்தியா மீதான அவர்களின் ஆர்வத்தையும் விருப்பத்தையும் அதிகரிக்கலாம் என்றார் அவர்.

முன்பு அவர் பண்பாட்டுப் பரிமாற்றப் பணியில் ஈடுபடவில்லை. 30 வயதுக்கு மேற்பட்ட அவர், செ சியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் பிறந்தார். துவக்க பள்ளி ஆசிரியராக சில ஆண்டுகளாகப் பணி புரிந்த பின், அவர் பெய்ஜிங் வெளியுறவு கழகத்தின் சர்வதேச பொருளாதாரப் பிரிவில் சேர்ந்து கற்றார். சீனாவின் அரசியல் மற்றும் பண்பாட்டு மையமான பெய்ஜிங்கில் அதிக எண்ணிக்கையில் கலை அரங்குகள் உள்ளன. ஓய்வு நேரத்தில் அவர் இந்த இடங்களில் கழித்தார்.

ஆசிரியர் பள்ளியில் நுண்கலை மற்றும் இசையைக் கற்றுக்கொண்டேன். எனக்கு இவற்றின் மீது இயல்பாகவே ஆர்வம் அதிகம் இருந்தது. வெளியுறவுக் கழகத்தில் பயின்ற போது, பெய்ஜிங்கின் பல்வேறு அருங்காட்சியகங்களிலும் கலை அரங்குகளிலும் தங்குவது எனது பொழுதுபோக்காகும். என்னை பொருத்த வரை, கலை எனது வாழ்வில் மிகவும் பெரிய இலட்சியமாகும். கலை மட்டும்தான் என்றுமே நிலையான பொருளாகும் என்றார் அவர்.

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040